ரெலோவும் வெளியேறினால் சம்பந்தனின் பதவி பறிபோகும் நிலை
உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாத நிலைக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கம் தள்ளப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஸ்ரீகாந்த தெரிவித்திருந்த நிலையில் தமிழரசுகட்சி இயக்கு நிலை தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான சம்பந்தன் பதறிப்போயிருப்பதாக தெரியவருகின்றது.
ரெலோவை தொடர்புகொண்ட சம்பந்தன் உடனடியாக தொலைபேசியில்பேசி நாங்கள் பேசி தீர்த்துக்கொள்ளலாம் வாருங்கள் என தம்மிடம் தெரிவித்துள்ளார் என தெரிவித்த சிறிகாந்தா தான் பேசத்தயார் ஆனால் எங்களுடைய நிலைப்பாட்டில் உறுதியாகவே இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.
ரெலோவின்றி அறிக்கையில், தமிழரசுக் கட்சி விடாப்பிடியான, விட்டுக் கொடுப்பற்ற நிலைப்பாட்டில் இருப்பதாகவும், இதனால் வேறு வழியின்றி இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு நாம் (ரெலோ) தள்ளப்பட்டுள்ளோம் எனத் தெரிவித்திருந்தமை சம்பந்து சுமந்திரனை ஒருகணம் ஆட்டம் காண வைத்துள்ளது.
தற்போதைய நிலையில் ஈ.பி.ஆர்.எல் எவ் விலகிய நிலையில் ரெலோவும் விலகினால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவி மற்றும் தமிழரசு கட்சியினருக்கு அரசு வழங்கிவரும் சலுகைகள் மற்றும் இராணுவ பாதுகாப்பும் நிறுத்தப்படலாம் என அஞ்சப்படுகிறது. இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டால் எவ்வாறு எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் பிரச்சாரத்திற்கு செல்வது என்ற நிலை தமிழரசு கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது.