தமிழரசுக்கட்சிக்கு மாகாண சபை உறுப்பினர் ஆ.புவனேஸ்வரன் பகீர்வு !

நாங்கள் எவ்வாறு செயற்படவேண்டும் யாருக்காகச் செயற்படவேண்டும் என்று தமிழ்தேசியக்கூட்டமைப்பில் பிளவு நிலை ஒன்று தோற்றம் பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவுப் பிரதேசங்களில் தமிழ் அரசுக் கட்சி எந்தவொரு விட்டுக் கொடுப்புக்கும் தயாராக இல்லாமையே பிளவு ஏற்படுவத ற்குக் காரணம்.
தமிழ் அரசுக் கட்சி அரசியல் ரீதியில் மக்களுக்கு எந்தளவு பங்களிப்பு செய்திருந்தார்களோ அதேயளவு பங்களிப்பு ஏனையவர்களும் செய்திருக்கின்றார்கள்.
நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாகச் செயற்படுகின்ற பொழுதுதான் எதிர்காலத்தில் சிங்கள தேசம் தரும் தீர்வை சரியானதாகப் பெற்றுக்கொள்ளமுடியும், தமிழ் கட்சிகளின் இப்பிளவு தமிழர்களின் தீர்வு விடயத்தை இன்னும் நீண்டகாலம் இழுத்தடிக்க உதவும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆசனப்பங்கீடு தொடர்பில் ஒரு பேச்சுவார்த்தை நடந்தபோது தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய கட்சிகள் கரைதுறைப்பற்று, புதுக்குடியிருப்பு பிரதேச சபைகளில் ஏதாவது ஒன்றைத் தாருங்கள் என்று கேட்டன.
ஆனால் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் இரண்டு இடமும் தமிழ் அரசுக் கட்சியினர் கேட்பதாக தெரிவித்தார்.
இவ் விடயத்தில் தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பாக நடந்து கொள்ளவில்லை. அதனால்தான் இவ் நிலைமை தோற்றமடைந்துள்ளதாக விளக்கி யுள்ளார்.