சல்மான் இன்று இராஜினாமா !
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.சல்மான் தனது உறுப்பினர் தனது பதவியில் இருந்து இன்று இராஜினாமா ஆகவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசி யப் பட்டியல் உறுப்பினர் பதவியை சுழற்சி முறையில் மற்றொருவருக்கு வழங்கும் தீர்மானத்துக்கு அமைவாகவே எம்.எச்.எம்.சல்மான் தனது பாரா ளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜி னாமாச் செய்யவுள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இரு தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்க ளில் ஒருவரான ஏ.ஆர்.எம். ஹாபிஸ் ஏற்கனவே தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து அவரது இடத்துக்கு எம்.எஸ்.தௌபீக் நியமிக்கப்பட்டார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். சல்மான் தனது பதவியை இராஜினாமா செய்வதால் நிலவும் வெற்றிடத்துக்கு கிழக்கைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவ ல்கள் கசிந்துள்ளன.