Breaking News

அர­சியல் கைதிகள் என்று எவ­ருமே இல்லை : யாழில் சுசில் பிரே­ம­ஜ­யந்த

நீதி­ய­மைச்சின் தக­வலின் படி அர­சியல் கைதிகள் என்று யாரும் இல்லை. அனை­வரும் குற்­ற­மி­ழைத்­த­வர்­களே. அவர்களே தடுத்து வைக்­கப்­ப­ட்டுள்­ளார்கள். இத்தகை யவர்கள் தொடர்­பான நட­வ­டிக்­கை­யா­னது நீதியின் ஊடா­கவே முன்­னெ­டுக்­கப்­பட முடியும் என அமைச்சர் சுசில் பிரே­ம­ஜ­யந்த தெரி­வித்­துள்ளார்.


உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் யாழ்.மாவட்­டத்தில் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி சார்பில் போட்­டி­யிடும் வேட்­பா­ளர்­களை தெரிவு செய்­வ­தற்­காக நேற்­றைய தினம் யாழ்ப்­பாணம் வருகை தந்த அமைச்சர் அங்கு ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி தொடர்­பாக யாழ்ப்­பாண மக்­களின் மனதில் நல்ல மதிப்­புள்­ளது. ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் உறுப்­பி­ன­ராக இருந்த துரை­யப்பா யாழ்ப்­பா­ணத்தின் மேய­ராக இருந்தார். அவ­ரது பெய­ரிலே துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கு உள்­ளது. 

இவ்­வாறு மக்கள் மத்­தியில் உள்ள நல்ல மதிப்பை நாங்கள் தொடர்ந்து பாது­காப்போம் என்றார். இதன்­போது அமைச்­ச­ரிடம் அர­சியல் கைதிகள் தொடர்­பாக ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேள்­வி­யெ­ழுப்­பிய போது, யுத்த முடிவின் போது 12 ஆயிரம் விடு­தலைப் புலி உறுப்­பி­னர்கள் சர­ண­டைந்த நிலையில் அவர்கள் புனர்­வாழ்­வ­ளித்து விடு­தலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர். 

தற்­போது சிறையில் 100 பேர் வரையில் உள்­ளார்கள். அவர்கள் அர­சியல் கைதிகள் அல்ல. கடந்த 85, 86, 87 ஆம் ஆண்டு காலப் பகு­தியில் இது போன்ற ஒரு குழு­வினர் இருந்­தார்கள். அவர்­களில் சிறு குற்­றங்­களை புரிந்­த­வர்­க­ளுக்கு பிணை வழங்­கப்­பட்­டது. 

குற்­றங்­களை ஒப்­புக்­கொண்­ட­வர்­க­ளுக்கு சிறு தண்­டனை வழங்­கப்­பட்­டி­ருந்­தது. தற்­போது அப்­ப­டி­யான நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­படும். அது எதிர்­வரும் ஆண்டு ஆரம்­பத்தில் முன்­னெ­டுக்­கப்­படும். குறிப்­பாக நீதி­ய­மைச்சின் தக­வலின் படி தற்­போது அர­சியல் கைதிகள் என்­று­ யாரும் இல்லை. 

இருப்­ப­வர்கள் அனை­வரும் குற்­ற­வா­ளி­களே ஆவர் என்றார். இதே­வேளை மீளக்­கு­டி­ய­மர்வு தொடர்­பாக வின­வி­ய­போது, யாழ்ப்­பா­ணத்தில் அநே­க­மான இடங்கள் தற்­போது விடு­விக்­கப்­பட்­டுள்­ளன. உதா­ர­ண­மாக வயாவிளானில் இருந்து பலாலி வரை விடுவிக்கப்பட்டுள்ளன. வயாவிளான் பாடசாலையும் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புத் தரப்பிடம் எந்தவொரு பாடசாலையும் இல்லை எனவும் தெரிவித்தார்.