மட்டக்களப்பு மீனவர்களின் வலைகளில் சிக்கியது பாம்பு - மக்கள் அச்சம் !
மட்டக்களப்பு நாவலடியில் இன்று காலை கரவலை தொழிலில் ஈடுபட்ட அனைத்து மீனவர்களின் வலைகளிலும் பாம்புகள் அகப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் பெரும் அச்சம் நிலவியுள்ளது.
அண்மைக் காலமாக கடல் கொந்த ளிப்பு காரணமாக மீனவர்கள் பாரிய நெருக்கடிக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையினை முன்னெடுத்துச் செல்கின்ற நிலையில் இன்று இவ்வாறு வலையில் பாம்புகள் சிக்கியுள்ளன.

அதிகளவிலான பாம்புகள் ஏன் அகப்படுகின்றன என்பது தொடர்பாக அதி காரிகள் ஆராயவேண்டுமென மக்கள் கேட்டுள்ளனர்.