கடற்படையினருக்கும் பொது மக்களுக்குமிடையில் விபரீதம் - மன்னாரில் !
மன்னார் தாழ்வுபாட்டு கடலில் நேற்று திங்கட்கிழமை காலை மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் சுமார் 25 மீனவர்களை கடற்படையினர் கைது செய்தி ருந்த நிலையில் கடற்படையினருக்கும், தாழ்வுபாட்டு கிராம மக்களுக்கும் இடையில் நேற்று மாலை முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
மன்னார் தாழ்வுபாட்டு கிராம மீனவர்கள் நேற்று திங்கட்கி ழமை காலை வழமை போல் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் தமது பாரம்பரிய தொழிலாக கடந்த 30 வருடங்களுக்கு மேலாக சுருக்கு வலையினை பயன்ப டுத்தியே மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் தொழிலுக்குச் சென்ற தாழ்வுப்பாட்டு மீனவர்களில் 5 பட குகளைச் சேர்ந்த 25 மீனவர்களை கடற்படையினர் கடலில் வைத்து கைது செய்து தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மீனவர்கள் கைது செய்யப்பட்டதனை அறிந்து கொண்ட தாழ்வுப்பாட்டு கிராம மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தாழ்வுப்பாட்டு கடற்கரை முகாமை நோக்கி சென்ற மக்கள் குறித்த மீனவர்களின் கைது தொட ர்பில் தமது எதிர்ப்பினை தெரிவித்தி ருந்ததோடு அவர்களை விடுதலை செய்யுமாறும் கோரி இருந்தனர்.
குறித்த கிராமத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் கடற்படை முகாம் அமைந்துள்ள பகுதியில் சூழ்ந்து கொண்டமையினால் அங்கு பதற்ற நிலை உருவாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் மற்றும் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மக்களுடன் கலந்துரையாடினர். எனி னும் கடற்படையினர் கைது செய்த குறித்த 25 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்குமாறும் விடுவிக்காத பட்சத்தில் குறித்த தாழ்வுப்பாட்டு கடற்படை முகாமை விட்டு தாம் கலைந்து செல்லப் போவதில்லை எனவும் தெரிவி த்ததை அடுத்து தாழ்வுப்பாட்டு கிராமத்தில் பதற்ற நிலை உருவாகியுள்ளது.
குறித்த மீனவர்கள் ஏன் கைது செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பில் கிராம மக்கள் கடற்படையினரிடம் கேட்ட போது அவர்கள் மீன் பிடிப்பதற்கான அனு மதிப்பத்திரத்தை தம் வசம் வைத்திருக்கவில்லை என கடற்படை தெரிவித்த தாக அந்த மக்கள் தெரிவித்தனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பொலிஸார் தாழ்வுப்பாட்டு கிராம மக்களுடன் கலந்துரையாடிய பின்னர் பொலிஸார் வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக கைது செய்யப்பட்ட 25 மீனவர்களையும் கடற்படையினரிடம் இருந்து பொலிஸார் பொறுப்பேற்று மன்னார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றுள்ளனர்.
குறித்த மீனவர்கள் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் குறிப்பிட்டனர். மன்னார் மாவட்டத்தில் ஏனைய பல பிரதேசங்களில் தடை செய்யப்பட்ட மீன் பிடித்தொ ழில்கள் இடம் பெறுகின்ற போதும் எமது தாழ்வுப்பாட்டு பிரதேசத்தில் மாத்தி ரம் ஏன் கடற்படையினர் இவ்வாறான கைது நடவடிக்கைகளை மேற்கொ ள்ளுகின்றார்கள் என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.