Breaking News

48 மணித்தியாலங்களில் பிணை முறி அறிக்கை வழங்கப்படும் - சுமதிபால உடுகமசூரிய

ஸ்ரீலங்கா மத்திய வங்கியின் பிணை முறி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி யால் நியமனமான ஆணைக்குழுவின் அறிக்கையை அடுத்த 48 மணித்தி யாலங்களுக்குள் ஜனாதிபதியிடம் கையளிப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. 


இவ் அறிக்கை தயாரிப்பு நடவடிக்கை இறுதி கட்டத்தில் உள்ளதாக ஆணை க்குழுவின் செயலாளர் சுமதிபால உடுகமசூரிய ஊடகமொன்றுக்கு தக வல் வழங்கியுள்ளார். 

இவ் அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேன கையளிப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. டிசம்பர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னதாக இந்த இறுதி அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படுமென சுமதிபால உடுகமசூரிய கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார். 

2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதியில் இருந்து 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை விற்பனையான பிணைமுறிகளில் மோசடி நடைபெற்ற குற்றச்சாட்டின் பிரகாரம் தொடர்பான விசாரணையை மேற்கொ ள்வதற்காக கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். 

ஒய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கே.ரி.சித்ரசிறியின் பங்களிப்புடன் அமை க்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில், 71 பேர் ஆதாரங்களை சமர்ப்பித்து ள்ளனர்.  இவ் விவகாரம் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள், இன்னாள் ஆளுநர்கள், பிரதமர், அமைச்சர்கள், பேர்ப்பசுவல் ட்ரேஸரிஸ் நிறுவன பணி ப்பாளர் உள்ளிட்ட பலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. 

பிணைமுறி மோசடி விவகாரம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதுடன், கூட்டு அரசாங்கம் பிளவடைவதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை வித்திடுமா என்ற ஐயப்பாடுகள் மக்கள் மத்தி யில் உள்ளது.