ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தீர்மானம் !
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட நடிகர் விஷால் தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே நகர் தொகு தியில், கடந்த ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்திரு ந்தது.
இதற்கிடையில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படை யில், ஏப்ரல் 10-ம் தேதி இடைத்தேர்தல் ரத்துச் செய்யப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியாக டிசம்பர் 4-ம் தேதி அறிவிக்கப்ப ட்டிருந்தது. இத்தேர்தலில் நடிகரும் தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் சுயேட்சையாக போட்டியிடப்போவதாக தகவல்கள் வெளியாகியு ள்ளன. அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகுமென எதி ர்பார்க்கப்படுகிறது.