விஜேவிக்கிரம புதிய இராஜாங்க அமைச்சராக பதவியேற்பு !
அம்பாறை, திகாமடுள்ள தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீயானி விஜேவிக்கிரம, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமை ச்சின் புதிய இராஜாங்க அமைச்சராக, இன்று பதவியேற்றுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்.
உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை இன்று காலை 10 மணிக்கு, அமைச்சு அலுவலகத்தில் பொறுப்பேற்றுள்ளார்.
கடந்த பத்தாம் நாள் ஞாயிற்றுக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வுக்கு ஆதரவு வழங்கும் நோக்கில், ஒன்றிணைந்த எதிரணிப் பக்கத்திலிருந்து விலகி அரசுடன் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.
அதனைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை காலை ஜனாதிபதி செயலக த்தில் ஜனாதிபதியிடமிருந்து இராஜாங்க அமைச்சர் பதவிக்கான தனது நிய மனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.
இராஜாங்க அமைச்சராக சில காலம் பதவி வகித்த புத்தளம் மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினர் பியங்கர ஜயரத்ன, ஒன்றிணைந்த எதிரணிக்கு ஆதரவு தெரி விப்பதாக அறிவித்து, அப்பதவியிலிருந்து விலகிச் சென்றிருந்த நிலையில், அவ்விடத்திற்கு ஏற்பட்டிருந்த வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டுள்ளார்.








