Breaking News

தமிழ் மாணவர்கள் கடத்தலுக்கான வழக்கில் கமாண்டர் பிரசாத்திற்கு பிடியாணை !

தமிழ் மாணவர்கள் ஐவர் உட்பட 11 தமிழர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகார வழக்கில் தலைமறைவாகியுள்ள மற்றுமொரு சந்தேக நபரான கடற்படை லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியை கைது செய்யுமாறு சர்வதேச பிடியாணையை நீதிமன்றம் விடுத்துள்ளது.

அத்துடன் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்ட 8ஆவது சந்தேக நபரான கடற்படை புலனாய்வுப் பிரிவு அதிகாரி காமினி என்பவரை எதிர்வ ரும் 25ஆம் திகதி வரை விளக்கமறி யலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி க்காலமான 2008ஆம் மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் கொழும்பு கொட்டாஞ்சேனை, தெஹிவளை ஆகிய பகுதிகளில் ஐந்து தமிழ் மாணவர்கள் உட்பட 11 தமிழர்கள் வெள்ளை வானில் கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டனர்.

இவ் வழக்கில் பிரதான சந்தேக நபராக கைது செய்யப்பட்ட ஸ்ரீலங்கா கட ற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் கமான்டர் டீ.கே.பி தஸநாயக்க மற்றும் கடற்படையின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐவருக்கும் அண்மை யில் பிணை வழங்கப்பட்டது.

இதனிடையே இந்த வழக்கில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டிருந்த மற்றொரு சந்தேக நபரான கடற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரி காமினி என்பவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது கமான்டர் டி.கே.பி தஸநாயக்கவும் பிரசன்னமாகியிருந்தார்.

வழக்கை விசாரணைக்கு எடுத்த நீதவான் லங்கா டி ஜயரத்ன, சந்தேக நபரான காமினி என்பவரை எதிர்வரும் 25ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கு மாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதேவேளை இந்த வழக்கில் சந்தேக நபராக குறிப்பிடப்பட்டிருக்கும் கட ற்படை லெப்டினன் கமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாகியு ள்ள நிலையில் அவரைக் கைது செய்யுமாறு சர்வதேச பிடியாணையை நீத வான் இன்று பிறப்பித்தார்.

அதேபோன்று சந்தேக நபர்களான கடற்படை அதிகாரிகள் சார்பாக பிரசன்னமா கியிருந்த சட்டத்தரணி அஜித் பிரசன்ன, ஊடகங்களுக்கு வெளியிடுகின்ற கரு த்து வழக்கு விசாரணைக்கு இடையூறாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கவனத்திற்கொண்ட நீதவான், இதுகுறித்து சம்பந்தப்பட்ட இடங்களில் முறைப்பாடு செய்யும்படி அறிவுறுத்தல் வழங்கினார். இதன்போது குறுக்கீடு செய்த சட்டத்தரணி அசித் சில்வா, இவ் வழக்கில் குற்றப்புலனாய்வுப் பிரிவி னர் பக்கச்சார்பாக நடப்பதாகவும், அதனால் அவர்களிடம் இருந்து விசாரணை க்கான பொறுப்பை மீளப்பெற்று, பொலிஸாரிடம் வழங்கும்படி கோரிக்கை யையும் முன்வைத்தார்.

இதனை கவனத்திற்கொண்ட நீதிமன்றம், இவ் விடயம் தொடர்பாக எழுத்து மூல கோரிக்கை ஒன்றை எதிர்வரும் 24ஆம் திகதி சமர்பிக்கும்படி அறிவுறுத்த ப்பட்டுள்ளது.