ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணையாக 2020 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சி பயணிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவி த்துள்ளார்.
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை முன் னிட்டு, பொலநறுவை கதுறு வெலப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசா ரக் கூட்டத்தில் பங்கேற்று உரையா ற்றிய போதே ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில்; .
தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை உறுதிசெய்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதுடன் நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட கட்சியாக, ஐக்கிய தேசிய முன்னணி உள்ளதாகவும் பிரதமர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தலுக்கு பின் மீண்டும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றவுள்ளதாக குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமை யில் அரசாங்கத்தை வழிநடத்த அனைவரும் தீர்மானித்துள்ளதாகவும் 2020 ஆம் ஆண்டு மேலும் பலப்படுத்தி, சிறந்த நாடொன்றை உருவாக்குவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமக்கு ஆணை வழங்க வேண்டுமென பிரதமர் மக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.