வேட்பாளர் மீது தாக்குதல் - இருவர் கைது - THAMILKINGDOM வேட்பாளர் மீது தாக்குதல் - இருவர் கைது - THAMILKINGDOM

 • Latest News

  வேட்பாளர் மீது தாக்குதல் - இருவர் கைது

  பொதுஜன பெரமுன வேட்பாளரின் மீது டயகம பகுதியில் தாக்குதல் மேற்கொ ள்ளப்பட்டுள்ள நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிஸா ரினால் கைதாகியுள்ளனர்.

  அக்கரப்பத்தனை பிரதேச சபையின் கீழ் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் போட்டியிடும் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் எஸ்.ராஜ்குமார் மீதே இத் தாக்குதல் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. இந்நிலையில் குறித்த வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொ ண்ட இலங்கைத் தொழிலாளர் காங்ர சின் ஆதரவாளர்கள் சிலர் டயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக டயகம பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று புதன் கிழமை மாலை 4.30 மணியளவில் நடைபெற்று ள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

  பலத்த காயங்களுக்குள்ளான எஸ்.ராஜ்குமார் டயகம வேவர்லி தோட்டப்பகு தியைச் சேர்ந்தவரெனவும் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்கை பெற்று வருவதாகவும் டயகம பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  வேவர்லி தோட்டப்பகுதில் மதுபோதையில் வந்த இரு இலங்கை தொழிலாளர் காங்ரஸின் ஆதரவாளர்கள் தன்மீது தாக்குதல் நடத்தியதாக காயங்க ளுக்குள்ளான பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் எஸ்.ராஜ்கு மார் டயகம பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யபட்ட முறைப்பாட்டின் மூலம்  தெரிவி க்கப்பட்டுள்ளது.

  காயங்களுக்குள்ளான ராஜ்குமாருக்கு வலது காதிலும் வலது கையிலும் பல த்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தனிப்பட்ட குடும்பதகராறு காரணமாகவே நடைபெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

   கைது செய்யபட்ட இருவரும் இன்று வியாழக்கிழமை நுவரெலியா நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தபடவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலி ஸார் தெரிவித்துள்ளனர். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: வேட்பாளர் மீது தாக்குதல் - இருவர் கைது Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top