கொமிசன் கூடவரும் சபைகளெல்லாம் தமிழரசு வசம்(காணொளி)
கூடிய அனைத்து சபைகளையும் தன்வசம் கொண்டு அவர்களது உறுப்பினர்களையே நியமித்துள்ளதாகவும் தமக்கு வெறும் 20வீதமான இடங்களை தந்து விரும்பினால் வாங்கோ அல்லது வெளியேறலாம் என சொன்னதாகவும் புளொட் பிரித்தானிய கிளை பொறுப்பாளர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய தொலைக்காட்சியான ஐ.பி.சி தமிழ் நேருக்கு நேர் விவாதத்தின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளதோடு தமிழரசுக்கட்சி எப்போதும் காசு உழைப்பதையே கண்ணும் கருத்துமாக உள்ளதாகவும் இதற்கு மாவை சேனாதிராசாவும் விதிவிலக்கல்ல எனவும் தெரிவித்துள்ளார்.