வவுனியாவில் சிங்கள குடியேற்றம் - 5 பிரதிநிதிகளென - ஆனந்தன்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடை பெறவுள்ளதுடன், வவுனியா மாவட்ட த்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தல் அலுவலகம் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே இதனை தெரிவித்துள்ளார். வவுனியா வடக்கு பிர தேசத்தில் தென்பகுதியில் இருந்து கலாபோகஸ்வெ போன்ற இடங்களில் இரு ந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சியின் போது சிங்கள குடியேற்றங்களை செய்திருந்தனர்.
இதன் காரணமாகவே, உள்ளுராட்சி சபைக்கு ஐந்து சிங்கள பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
ஆகவே வவுனியா வடக்கு பிரதேச சபையை எங்களது கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும் என்றால் இந்த வாக்குகள் சிதறாமல் இருந்தால் மாத்திரமே சாத்தியமெனத் தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லையெனில், இந்த பிரதேச சபையின் தவிசாளர் கூட பெரும்பா ன்மையினராக மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பி னர் தெரிவித்துள்ளார்.