Breaking News

தன் வாக்கினை அளித்தார் ஜனாதிபதி !

உள்ளுராட்சிமன்ற தேர்தலில் ஜனா திபதி மைத்திரிபால சிறிசேன வாக்க ளித்துள்ளார். பொலன்னறுவையிலு ள்ள வித்யாலோக்க விகாரையில் உள்ள வாக்களிப்பு மத்திய நிலைய த்தில் ஜனாதிபதி இன்று வாக்களித்து ள்ளமை குறிப்பிடத்தக்கது. அமைதி யான முறையில் தேர்தலை நடத்தும் வகையில் புதிய தேர்தல் முறையை அமுல்படுத்தியதை எண்ணி தான் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன வாக்களித்த பின் தெரிவித்தார். அனைத்து உள்ளூராட்சி மன்ற ங்களுக்கும் மிக நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரே நாளில் இன்று தேர்தல் நடை பெறுகின்றமை மகிழ்ச்சியளிக்கிறது. 

49 ஆண்டுகளுக்கு பின்னர் தொகுதிவாரி தேர்தல் முறை ஒழிக்கப்பட்டு விகி தாசார முறையிலான கலப்பு முறை தேர்தல் இம்முறை நடைபெற்று வரு கிறது. இதன்மூலம் வன்முறைகள் குறைக்கப்பட்டு மிகவும் அமைதியான முறையில் தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்த உள்ளூ ராட்சி மன்றத் தேர்தலில் சுதந்திரமாகவும் மகிழ்ச்சியுடனும் அச்சமின்றி யாரு டைய தலையீடுமின்றி வாக்களிப்பதற்கு மக்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் வாய்ப்புக் கிடைத்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வெற்றியின் பின்னர் அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் அபிவிருத்திக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். மக்களின் மும்முரமான வாக்களிப்பின் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிட்டும் என எதிர்பார்க்கின்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.