Breaking News

பேரினவாத கட்சிகளுடன் போட்டியிட வெட்கமில்லையா? (காணொளி)

தமிழ் பெண்களின் கற்புக்களை சூறையாட காரணமான பேரினவாத கட்சி களுடன் இணைந்து போட்டியிட வெட்கமில்லையா என தேசியக்கட்சிகளு டன் போட்டியிடும் வேட்பாளர்களிடம் வடமாகாண சபையின் முன்னாள் உறு ப்பினர் செ. மயூரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமை ப்பில் இருந்து பிரிந்து சென்றவர்க ளுக்கு மக்கள் தகுந்த பதிலடியை தேர்தலில் வழங்குவார்கள் எனத் தெரிவித்த மயூரன், அவர்களுக்கான அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விட்டது எனவும் குறிப்பிட்டு ள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நெடுங்கேணியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்று ம்போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் தேசிய கூட்ட மைப்பின் வீட்டுச்சின்னத்தில் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களாக அலங்கரிப்பதோடு மாகாணசபை உறுப்புரிமையும் பெற்றுக்கொண்டவர்கள் இன்று எதிரணியில் இருந்து கொண்டு எங்களை பார்த்து கேள்வி கேட்கின்ற நிலைமையில் நாங்கள் இருக்கின்றோம்.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களுக்கு கடந்த காலங்களில் குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையி லான தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 2010ம் ஆண்டு நடைபெற்ற நாடா ளுமன்ற தேர்தலிலே பலத்த அடியினை கொடுத்திருந்தோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை விட்டுச்சென்றவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லாமல் போய்விட்டது. தமிழ் மக்களை ஆழ்கின்ற தமிழ் தலைமைகளாக வலம் வருகின்ற நிலை 2010ம் ஆண்டு இல்லாமல் போய்விட்டது. 2018ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலிலே ஈழமக்கள் புரட்சிகர முன்னணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பை என்ன செய்தார்கள் என்று கேட்கின்றார்கள்.

அவர்களுக்கு ஒன்று சொல்கின்றேன் வவுனியா வடக்கு பிரதேச சபை மாத்திரமல்ல வவுனியாவின் நகரசரப உட்பட நான்கு சபைகளையும் தமிழ் தேசிய கூட்டமைப்பே கைப்பற்றும். இதுவரை காலமும் எங்களை விட்டு சென்றவர்களோடு பழகினோம் என்பதை இட்டு வெட்கப்பட வேண்டியிருக்கி றது.

அவர்களாகவே தாம் தமிழர்களோடு வாழ்வதற்கு அருகதையற்றவர்கள் என்பதை நிரூபிப்பதற்கான தேர்தலாக இதை எடுத்துள்ளார்கள். ஆகவே மக்கள் நீங்கள் துரோகிகளுக்கு வாக்களிக்காதீர்கள். உதய சூரியன் கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு ஒரு போட்டி கட்சியே அல்ல. தமிழ் தேசிய கூட்ட மைப்பிற்கு போட்டி கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பே உள்ளது.

இடைக்கால அறிக்கை தொடர்பாக அறிக்கை வெளியிட்டு வருகிறார்கள். இடைக்கால அறிக்கைக்கும் பிரதேச சபைக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது. இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினராகவும், மாகாணசபை உறுப்பின ராகவும் இருந்து மக்களை ஏமாற்றியது போதும்.

இனியும் மக்களை ஏமாற்றுவதற்கு நாம் சந்தர்ப்பம் வழங்கமாட்டோம். தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவித தீர்வையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளாது என ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அதுமாத்திரமன்றி தென்னிலங்கை பேரினவாத கட்சிகள் வடக்கு கிழக்கில் இனி போட்டியிடாத வகையில் தமிழ் மக்கள் அவர்களிற்கு நல்ல பாடத்தை புகட்ட வேண்டும். தமிழர்கள் சலுகைகளிற்கு விலை போகாதவர்கள் என்பதை நிரூபித்து காட்டுங்கள் என அவர் வலியுறுத்தியுள்ளார்.