Breaking News

வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கும் ஜனாதிபதிக்கும் சந்திப்பு இன்று!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய  வேட்பாளர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (15.02.2018) கொழும்பு கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் ஆரம்ப மாகவுள்ளது. 

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் அரசியல் கட்சிகள் மற்றும் கூட்டணியை பிரதி நிதித்து வப்படுத்தியே மேற்படி கலந்துரையா டல் ஆரம்பமாகவுள்ளது. 

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, இல ங்கை தொழிலாளர் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் மற்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பிரதி நிதித்து வப்படுத்தி உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அனைத்து அபேட்சகர்களும் இச் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.