சட்டப்பேரவையின் மாண்பை குலைக்கிறதா.. ஜெ புகைப்படம்.! (காணொளி)
தொன்மை வாய்ந்த தமிழக சட்ட ப்பேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படமானது சில நாட்களுக்கு முன்னதாக தற்போதைய சபாநாயகர் தனபால் அவர்களால் திறந்தது வைக்கப்பட்டது. அதே சமயம், சொத்து குவிப்பு வழக்கில் குற்ற வாளியென தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்தினை சட்டப்பேரவையில் திறப்பது என்பது பேரவையின் மாண்பினை குலைக்கும் செயல் என விமர்சிக்கின்றன திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலும் அவர் பெரும்பா ண்மை மக்களின் மனங்களை கவர்ந்த தலைவி. அதன் காரணத்தினாலேயே அவரது புகைப்படம் பேரவையில் திறக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது டன், நாடாளுமன்றத்திலும் ஜெ புகைப்படத்தினை திறக்க முயல்வோம் என தெறிக்க விடுகின்றனர் இரத்தத்தின் ரத்தங்கள்.
இதற்காக நடைபெற்ற நிகழ்வில் அதிமுக எம்எல்ஏக்களை தவிர்த்து வேறு கட்சிகளைச் சார்ந்த எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்கவில்லை. மேலும், ஜெ படத்திறப்பு விழாவில் கலந்து கொள்வார் என கருதப்பட்ட பிரத மர் மோடி, ஆளுநர் உள்ளிட்ட எவரும் பங்கேற்கவில்லை.