Breaking News

மைத்திரி,ரணிலிடம் மக்களின் பணம் என்கிறார் - மஹிந்த (காணொளி)

ஸ்ரீலங்காவிலுள்ள அரச வங்கிகளில் உள்ள பொதுமக்களின் பணத்தை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையி டம் இருந்து பாதுகாக்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருப்ப தாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தனது ஆட்சிக்காலத்தில் எந்தவொரு அரச வங்கி ஊழியரும் வீதியில் இறங்கி ப் போராடவில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, ஆனால் இன்று நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் ஆரம்பி த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொழும்பு – இராஜகிரியவில் உள்ள தனது தொடர்பாடல் அலுவலகத்தில் கூடியிருந்த ஊடகவியலாளர் மத்தி யில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கருத்து வெளியிட்டார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை அறிக்கை மீதான விவாதம் ஸ்ரீலங்கா நாடாளு மன்றத்தில் இன்று நடைபெறுகின்ற போதிலும், அதில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கலந்துகொள்ளவில்லை.

இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் இதன்போது வினவினர். இதற்கு பதில ளித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச “நான் இன்று காலை நாடாளு மன்றத்திற்குச் செல்வதற்கு முன் எமது குழு ஒன்றிணைந்தது.

கந்தளாய் பகுதிக்கு நான் இன்றைய தினம் செல்லவிருப்பதாலும், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகார விவாதம் மூன்று நாட்களுக்கு இருப்ப தாலும் இன்று அந்த விவாதத்தில் கலந்து கொள்வதிலிருந்து தவிர்த்துக் கொள்ள முடிவெடுத்துள்ளேன்.

இவ் விவாதம் ஒருதினமே இடம்பெறும் என்று நினைத்திருந்தோம். ஒரே தின த்தில் விவாதம் முற்றுபெருமாக இருந்தால் இன்றைய தினமே நானும் சென்று கலந்து உரையாற்றியிருந்திருப்பேன். எனினும் மூன்று நாள் விவாதம் என்பதால் இறுதி நாளில் உரையாற்றுவதற்கு நான் தீர்மானித்துள்ளேன்” என்றார்.

இதேவேளை ஸ்ரீலங்காவிலுள்ள அரச வங்கிகளில் சிறிது சிறிதாக சேமித்து வரும் மக்களின் பணத்தை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அவர்கள் தலைமையிலான அமைச்சரவையிலிருந்து வங்கிகளைக் காப்பாற்ற வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தனது ஆட்சிக்காலத்தில் அரச வங்கிகளை தனியார் மயப்படுத்தலில் இருந்து தடுத்ததாகவும், ஆனால் இன்று அரச வங்கிகளை பாதுகாத்துக் கொள்வத ற்காக வங்கிகளின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதாகத் தெரிவித்தார். 

எனவே ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சரவையிடம் இருந்து அரச வங்கிகளைப் பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனத் தெரிவி த்துள்ளார்.