Breaking News

“தூய அரசியல் இயக்கத்துக்கான பயணம் 10ஆம் திகதி ஆரம்பம்”

மக்கள் மீது நம்பிக்கை வைத்து தூய அரசியல் இயக்கத்துடன் நாட்டை முன்கொண்டு செல்லும் நிகழ்ச்சித் திட்டம் பெப்ரவரி 10ஆம் திகதி ஆரம்பி க்கப்படுமென  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மஹரகமவில் நேற்று (6) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனா திபதி இதனைத் தெரிவித்தார். “ஊழல் அரசியல்வாதிகளைப் பாதுகாப்பத ற்காக புதிய கட்சியொன்றினூடாக கட்டி யெழுப்பப்பட்டுள்ள பிம்பம் எதி ர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி, நாட்டை நேசிக்கும் மக்களுடன் இணைந்து வீழ்த்தப்படும். “எதிர்காலத்தில் இந்த நாட்டை சுபீட்சமான தேசமாகக் கட்டியெழுப்புவதற்காக தூய அரசி யல்வாதிகளே தலைமைதாங்க வேண்டும். அத்தகைய மக்கள் சார்பு இயக்க த்தில் முன்னணி வகிக்கக்கூடியது நாட்டின் மக்கள் சார்பு இயக்கமான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மட்டுமே. 

“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியை, நான் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி பெற்றுக்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி தெரி வித்திக்கிறார். முன்னாள் சபாநாயகரின் இல்லத்திற்கு என்னை அழை த்து, கட்சி உறுப்பினர்களின் முன்னிலையில், தலைவர் பதவியை எனக்குப் பொறு ப்பளித்தவரே முன்னாள் ஜனாதிபதி தான். 

ஆனால், இவ்வாறு முன்னுக்குப் பின் முரணாகக் கூறும் கூற்றுக்கள் என்னைக் கவலையடையச் செய்கின்றன” என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.