Breaking News

அமைச்சரவை மறுசீரமைப்பு ( விபரம் இணைப்பு)

தேசிய அரசாங்கத்தின் இரண்டாவது அமைச்சரவை மறுசீரமைப்பு இன்று (25) இடம்பெற்றது.

இன்று காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் புதிய அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இந்த அமைச்சு சாகல ரத்நாயக்க வசம் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவி வகித்த லக்ஸ்மன் கிரியெல்லவிற்கு இன்று அரச முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

லக்ஸ்மன் கிரி​யெல்ல வசமிருந்த உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு கபீர் ஹசீம் இதற்கு முன்னர் அரசமுயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சராக அவர் பதவி வகித்திருந்தார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சராக பதவி வகித்த சாகல ரத்நாயக்கவிடமிருந்த சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு மீளப்பெறப்பட்டு அதற்கு பதிலாக இளைஞர் விவகார வழங்கப்பட்டுள்ளது.

ஹரீன் பெர்னாண்டோவுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சுக்கு மேலதிகமாக தலதா அத்துகோரல வசமிருந்த வௌிநாட்டு வேலைவாய்ப்புக்கள் அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.

காமினி ஜயவிக்கிரம பெரேராவிடமிருந்த வன ஜிவராசிகள் அமைச்சும் அதற்கு மேலதிகமான நிலையான அபிவிருத்தி அமைச்சும் ரவீந்திர சமரவீரவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார பிரதி அமைச்சராக இருந்த கலாநிதி ஹர்ஷ டி சில்வா குறித்த அமைச்சின் இராஜாங்க அமைச்சு வழங்கப்பட்டுள்ளது.


இதேவேளை பியசேன கமகே இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்

ரணில் விக்ரமசிங்க – சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு

லக்ஸ்மன் கிரியெல்ல – அரச முயற்சியாண்மை மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சு

கபீர் ஹசீம் – உயர்கல்வி மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சு

சாகல ரத்நாயக்க – இளைஞர் விவகார அமைச்சு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

ஹரீன் பெர்னாண்டோ – டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் வௌிநாட்டு வேலைவாய்ப்பு

ரவீந்திர சமரவீர – வனவிலங்குகள் மற்றும் நிலையான அபிவிருத்தி அமைச்சு

பியசேன கமகே – இராஜாங்க அமைச்சு – இளைஞர் விவகாரம் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு

அஜித் பி பெரேரா – இராஜாங்க அமைச்சு – சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் புனர்வாழ்வு அமைச்சு

ஜே.அலவத்துவல – பிரதி அமைச்சு – உள்விவகாரம்

கலாநிதி ஹர்ஷ டி சில்வா – இராஜாங்க அமைச்சு – தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரம் அமைச்சு