Breaking News

இலஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு நடந்த விபரீதம்.!

வவுனியாவில் லஞ்சம் வாங்கிய வன இலாகா அதிகாரி இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வன இலாகா அதிகா ரியே இலஞ்சம் பெற்ற குற்றச்சா ட்டில் கொழும்பில் இருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் தடுப்பு ஆணை க்குழு அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.  மரம் வெட்டுவ தற்கான அனுமதி வழங்குவதற்கு இலஞ்சம் பெற்ற நிலையிலேயே வவு னியா, நெடுங்கேணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெடிவைத்த பகுதியில் வைத்து வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் வசிக்கும் 36 வயதுடைய வன இலாகா அதிகாரியே கைதாகியுள்ளார். குறித்த நபரை விசாரணையின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.