மஹிந்த ரணிலிற்கு அறிவுரை அம்பலப்படுத்தினார் ராஜித.!
மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொடர்பு கொண்டு அவரை பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டாமென தெரிவித்துள்ளார்.
அதிகமான வாக்குவீதத்தை பெற்றுக்கொண்டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணிலிடம் கேட்டுள்ள தாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ தற்போதைய நிலைமையில் ஆட்சி அமைக்கவோ, பிரதமர் பதவி ஏற்கவோ முன்வர மாட்டார். காரணம் அடுத்து வரும் இரண்டு வருட ங்கள் மிகவும் கடினமானவை என அவருக்கு தெரியுமெனத் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த சந்தர்ப்பத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ராஜித சேனாரட்ன மேலும் குறிப்பிடுகையில்;
மஹிந்த ராஜபக்ஷ இந்தத் தேர்தலில் அதிகமான பிரதேச சபைகளின் அதிகாரத்தையே கைப்பற்றியுள்ளார். ஆனால் மொத்தமான மக்களின் ஒட்டுமொத்த ஆதரவு எமது பக்கமே இருக்கிறது.
அதனை தேர்தல் முடிவுகள் நன்றாக உணர்த்துகின்றன.
மேலும் தற்போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி அமைப்பதற்கான எந்த முயற்சியையும் முன்னெடுக்கமாட்டார். காரணம் அடுத்து வரும் இரண்டு வருட ங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும். மஹிந்த ராஜபக்ஷ பெற்ற கடன்களுக்காக அதிகமான மீள் கொடுப்பனவுகள் அடுத்தவருடமும் அதற்கு அடுத்த வருடமும் செய்யப்படவேண்டும்.
எனவே அது மிகவும் கடினமாக அமையும் என அவருக்கு தெரியும். அதனால் தான் அவர் ஆட்சி அமைத்து பிரதமர் பதவியை பெறும் முயற்சிகளை முன்னெடுக்காமல் இருக்கிறார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்கிரமவை தொடர்பு கொண்டு அவரை பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டாமெனத் தெரிவித்துள்ளார்.
அதிகமான வாக்கு வீதத்தை பெற்றுக் கொண்டதால் நீங்கள் ஏன் பதவி விலக வேண்டுமென மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரணிலிடம் கேள்வி தொடுத்துள்ளார்.
மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக எமது இணையமான Tamilkingdom.com தளத்துடன் இணைந்திருங்கள். உங்கள் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் மிகவும் அன்புடன் வரவேற்கின்றோம்.