Breaking News

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் 6 ஆம் திகதி ஆரம்பம்

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் ஆறாம் திகதி ஆரம்­பிக்­கப்­படும். உறுப்­பி­னர்கள் கட்சி மாறினால் உறுப்­பினர் பதவி இரத்­தா கும் என மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்சு தெரி­வித்­துள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் அங்­கத்­த­வர்கள் பற்­றிய சட்­ட­பூர்வ வகையில் மாகாண சபைகள் மற்றும் உள்­ளூ­ரா ட்­சி­மன்ற அமைச்சின் செய­லாளர்   
கமல் பத்­ம­சிறி ஊட­கங்­க­ளுக்கு விடு த்­துள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­ ­கப்­பட்­டுள்­ளது. 

 அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளா­த­வது, 

உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் சட்­டத்தின் பிர­காரம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்கு தேர்­தல்கள் ஆணைக்­கு­ழு­வினால் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்கள் தொட ர்பில் பகி­ரங்­கப்­ப­டுத்­தி­யதன் பின்னர் மாகா­ண­ச­பைகள் மற்றும் உள்­ளூ­ராட்சி மன்ற அமைச்­சரின் நிய­தியின் பிர­காரம் வெளி­யி­டப்­படும் வர்த்­த­மானி அறி­விப்­பி­னூ­டாக உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் உறுப்­பி­னர்­களின் பத­விக்­காலம் எதிர்­வரும் மார்ச் மாதம் 6ஆம் திக­தியில் இருந்து ஆரம்­பிக்­கப்­படும் என அறி­விக்­கப்­படும். 

அத்­துடன் ஏதா­வது உள்­ளூ­ராட்சி மன்றம் ஒன்றில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட அர­சியல் கட்சி ஒன்று அல்­லது சுயேட்சை குழு­வொன்று குறித்த சபையில் மொத்த ஆச­னங்­களின் எண்­ணிக்­கையில் 50வீதம் அல்­லது அதற்கு மேற்­பட்ட ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டி­ருந்தால், தேர்­தல்கள் ஆணைக்­கு­ழுவின் தலைவரால் குறிப்­பிட்ட அர­சியல் கட்­சியின் செய­லா­ள­ரிடம் அல்­லது சுயே ட்சை குழுவின் தலை­வ­ரிடம் தெரி­வு­செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களில் இருந்து சபையின் தலைவர், உப­த­லைவர், நகர பிதா, பிரதி நக­ர­பி­தாக்­களின் பெயர்­களை உறு­திப்­ப­டுத்­து­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படும். 

அதே­நேரம் குறித்த உள்­ளூ­ராட்சி மன்­ற­மொன்றில் மொத்த ஆச­னங்­களில் 50 வீதமோ அதற்கு அதி­கமோ அர­சியல் கட்­சி­யொன்­றி­னாலோ அல்­லது சுயே ட்சை குழு­வொன்­றி­னாலோ பெற்­றுக்­கொள்ள முடி­யாத சந்­தர்ப்­பத்தில், குறித்த சபையின் முத­லா­வது சபை அமர்­வின் ­போது நக­ர­பிதா அல்­லது பிரதி நக­ர­பிதா சபை உறுப்­பி­னர்­களின் வாக்­கு­க­ளினால் தெரி­வு­செய்­து­கொள்­ளப்­ப­ட­வேண்டும். 

இதன்­போது சபைக்கு உள்­ளூ­ராட்­சி­மன்ற ஆணை­யாளர் தலைமை வகிப்பார். உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்தல் சட்­டத்தின் 10ஆம் சரத்தின் பிர­காரம் எந்­த­வொரு கட்­சியின் செய­லா­ள­ரினால், தங்­களின் கட்­சி­யினால் தெரி­வு­செய்­யப்­பட்­டி­ரு க்கும் உறுப்­பினர் கட்சியின் அங்கத்துவத்தில் இருந்து நிறுத்தப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அறிவிப்பதன் மூலம் அதனை மாவட்ட தேர்தல் அதிகாரி ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில், குறித்த உறுப்பினர் சபை உறுப்பினர் பத வியில் இருந்து நீக்கப்பட்டதாக கட்சி செயலாளருக்கு தெரிவிக்க முடியும்.