அமைதியாக இடம்பெற்ற பிணைமுறி விவாதம்.!
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் முன்வைத்து விவாதத்தை ஆரம்பித்தார்.
விவாதத்திற்கு பெரும்பாலான உறுப்பினர்கள் வருகை தரவில்லை. இத னால் மந்தகதியில் விவாதம் நடைபெற்றது.
பிரதமரின் பிரேரணையை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல முன்மொழிந்தார்.
பாராளுமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்பின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை முன்வைத்தார்.
பிரதமரின் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை சபை முதல்வரும் அமை ச்சருமான லக்ஷமன் கிரியெல்ல அமோதித்தார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொட ர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் மீதான விவாம் தொட ர்பில் அனைவரினதும் எதிர்பார்ப்பு இருந்தது. எனினும் நாடு எதிர்பார்த்த வகையில் விவாதத்தின் நடவடிக்கை கள் இல்லை. பாராளுமன்ற அமர்வுகள் மிகவும் மந்தகதியில் இருந்தது. அத்துடன் எதிர்பார்த்த அளவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் விவாதத்திற்கு பங்குபற்றவில்லை.
பாராளுமன்ற அமர்வு ஆரம்பித்த போது சபையில் 20 உட்பட்ட உறுப்பினர்கள் மாத்திரமே அமர்ந்திருந்தனர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பலர் இருந்தனர்.
மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களில் விஜித்த ஹேரத் தவிர ஏனையோர் வருகை தந்திருந்தனர். சுதந்திரக் கட்சியில் நான்கு பேரளவிலேயே வருகை தந்திருந்தனர். கூட்டு எதிர்க்கட்சியில் பெருந்தொகையானோர் வருகை தந்திருக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் வருகை தரவில்லை.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா, எரான் விக்கிரமரத்ன, ரவி கருணாநாயக்க, அஜித் பீ பெரேரா ஆகியோரும் சுதந்திரக் கட்சி சார்பில் மஹிந்த அமரவீர, லசந்த அலகியவண்ண ஆகியோரும் கூட்டு எதிர்க்கட்சி சார்பில பந்துல குணவர்தன, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அதன் தலைவரும் எதிர்க்கட்சி பிரதம கொறடாவுமான அநுர குமார திஸாநாயக்க விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இதன்படி காலை 10.30 மணிக்கு பாராளுமன்றம் கூடி மாலை 4 மணிக்கு நிறைவெய்தியது.