
அம்பாறை மாவட்ட முன்னாள் நாடா ளுமன்ற உறுப்பினர் மாமனிதர் கெப்டன் அரியநாயகம் சந்திரநேரு, தமிழீழ விடு தலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப். கேணல் கௌசல்யன் உட்பட படுகொலை செய்யப்பட்ட 7 பேரின் 13வது நினைவே ந்தல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை மாலை (08) திருக்கோவிலில் அனுஷ்டி க்கப்பட்டது. இவ் நினைவேந்தலானது மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் மகனும் முன்னாள் நாடாளுமன்ற உறு ப்பினரும், மனித உரிமை செயற்பாட்டா ளருமான சந்திரநேரு சந்திர காந்தனின் தலைமையில் அம்பாறை திருக்கோ வில்-2 சுப்பர்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு அருகாமையில் அமை ந்துள்ள நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாமனிதர் அரியநாயகம் சந்திரநேருவின் உருவப்படத்திற்கு அவரது மனைவி மலர் மாலை அணிவித்து தீபச் சூடர் ஏற்றியதுடன் அம்பா றை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கேணல் கௌசல்யனின் உருவ ப்படத்திற்கு சந்திரநேரு சந்திரகாந்தன் மலர் மாலை அணிவித்து நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.