பிரதமர் பதவியை ஏற்க சஜித், கரு மறுப்பு.!
பிரதமர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியினால் அமைச்சர் சஜித் பிரேமதாசவும் சபாநாயகர் கரு ஜயசூரியவும் பிரதமர் பதவியை ஏற்க மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் முழுமையான அங்கீகாரம் இன்றி பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள முடியாதென சஜித் பிரேமதாஸவும் கரு ஜயசூரிய வும் தெரிவித்துள்ளனர்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்த நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியை ராஜினாம செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வந்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஒருசாரார் அமைச்சர் சஜித் பிரேமதாஸவை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று கூறி வந்த நிலையில் சபாநாயகர் கருஜயசூரியவை பிரதமராக நியமிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்தார்.
இந்த நிலையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் சபாநாயகர் கருஜயசூரியவும் தாம் ஐக்கிய தேசியக் கட்சியின் முழுமையான அங்கீகாரமி ன்றி பிரதமர் பதவியை ஏற்கப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.