இலங்கை சிறையிலிருந்து 113 இந்திய மீனவர்கள் விடுதலை.!
எல்லை தாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 113 பேரை விடுவிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி இந்திய துணைத் தூதரகம் இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்த பரிந்துரைக்கு அமைவாக இவர்களை விடுவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்படுவது வழமையாகியுள்ள நிலையில் இவ்வாறு இலங்கை கடல் பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு யாழ்ப்பாணம் சிறையில் 121 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் இலங்கை கடற்படை யால் கைதுசெய்யப்பட்ட மண்டபம் பகுதி மீனவர் ஒருவர் விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று மண்டபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள இந்திய மீனவர்களை பிணையில் விடுவிக்க இலங்கை அர சாங்கத்திற்கு இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் மூலம்
கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
அதனை
தொடர்ந்து சிறையில் உள்ள மீனவர்களில் 113 மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய மீனவர்களில் முதல் கட்டமாக 113 மீனவர்களை விடுதலை செய்ய சட்டமா அதிபர் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது. 113 மீனவர்களையும் விடுதலை செய்ய இலங்கை அரசு உத்தர விட்டதாக யாழ்.மீன் வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.