Breaking News

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால், வளாகத்தில் உள்ள 50 கடைகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் மீனாட்சி பக்தர்களி டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர நுழைவு வாசலில் உள்ள பகுதி கடைகளில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவலறிந்து வந்த தீ அணைப்பு படை வீரர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 50-க்கும் மேற்ப ட்ட கடைகள் எரிந்து நாசமாகின.

நள்ளிரவு நேரத்தில் விபத்து ஏற்பட்டதால் எந்தவித உயிர்சேதமும் ஏற்பட வில்லை. விபத்துக்கான சரியான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்பட வில்லை. ஆனால் மின்கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாமென தகவ ல்கள் வெளியாகியுள்ளன. 

மேலும் இந்த தீ விபத்தினால், ஆயிரங்கால் மண்டபத்தின் மேற்கூரைக்கு ஆப த்து என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.