Breaking News

தமிழ் தேசிய கட்சிகளை ஒன்று சேருமாறு ரெலோ அழைப்பு.!

தமிழ் மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கும் அடிப்­படை அர­சியல் பிரச்­சி­னைக்கும் நீதி­யா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான தீர்வு ஒன்­றினை நோக்­கிய பயணம் எந்­த ­வி­தத்­திலும் தடைப்­பட்டு விடாமல் தொடர்ந்தும் உறு­தி­யோடும் உத்­வே­கத்­தோடும் முன்­னெ­டுக்கப்­ப­டு­வ­தற்கு ஏது­வாக வட­க்கு, கி­ழக்கை தள­மாக கொண்டு இயங்கிக் கொண்­டி­ருக்கும் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் புரிந்­து­ணர்­வுடன் பொது கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு ஒன்­றி­ணைய வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்­சி­யான ரெலோ அழைப்பு விடுத்­துள்­ளது.

யாழ்ப்­பா­ணத்­தி­லுள்ள விடுதி ஒன்றில் நேற்று மாலை நடத்­திய ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின் போதே அக் கட்­சியின் செய­லாளர் நாய­கமும் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­யு­மான ஸ்ரீகாந்தா அழைப்பு விடுத்­துள்ளார்.

இங்கு மேலும் தெரி­விக்­கையில்,

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வடைந்த நி­லையில் அவ­ச­ர­மா­னதும் அவ­சி­ய­மா­ன­து­மான சில விட­யங்­களை மக்­க­ளுக்குத் தெரி­விக்க வேண்­டிய கட்­டாய சூழ்நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் முடி­வுகள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கு பின்­ன­டைவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக ஒரு சில சக்­திகள் உள்நாட்­டிலும் வெளி­நாடுகளிலும் பிர­சா­ரத்தில் ஈடு­பட்­டுள்ள சூழலில் வடக்கு, கிழக்கு மாகா­ணங்களில் உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் தொடர்­பாக தேர்தல் முடி­வு­களை ஆழ­மாக ஆராய்ந்தால் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ர­வு ­பலம் அசை­யாமல் இருப்­பதை எவரும் உண­ர­மு­டியும். அதேநேரத்தில் சில எதிர்­பா­ராத பின்­ன­டை­வுகள் ஏற்­பட்­டுள்­ளன என்­பதை நாங்கள் ஏற்­க­னவே ஏற்­றுக்­கொண்­டுள்ளோம். 

ஆயினும் தமிழ் இனத்தின் பிர­தான தேசிய சக்­தி­யாக,பிர­தி­நி­தித்­துவ சக்­தி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மீண்டும் தன்னை இந்தத் தேர்­தலின் மூலம் நிலை நிறுத்­தி­யி­ருக்­கின்­றது என்­ப­தும் தெட்­டத்தெ­ளி­வாகும். 

யாழ்.மாவட்­டத்தில் இரண்டு உள்­ளூ­ராட்சி சபைகள் தவிர ஏனைய சபை­களில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு பெற்­றி­ருக்­கின்ற வாக்­கு­களை ஆராய்ந்து பார்த்­தாலும் சரி அல்­லது தீவ­கத்தில் இரண்டு உள்­ளூ­ராட்சி சபைகள் தவிர யாழ். மாவட்­டத்தில் ஏனைய கட்­சிகள் பெற்­றி­ருக்கும் வாக்­கு­களை ஆராய்ந்து பார்த்­தாலும் சரி நாங்கள் மற்றக் கட்­சி­களுடன் ஒப்பிடுகையில் பாரிய இடை­வெ­ளியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம் என்­பதை தெட்­டத்­தெளி­வாக காணக்­கூ­டி­ய­தா­க­வுள்­ளது. 

தற்­போது இதைப்­பற்றி அதி­க­மாக பேச வேண்­டிய தேவை­யில்லை.எங்கள் முன் உள்ள கேள்வி என்­பது புதிய தேர்தல் முறையின் கீழ் ஸ்திர­மான நிர்­வா­கத்தை நாங்கள் எப்­படி நடத்­தப்­போ­கிறோம். இந்த விட­யத்தில் தமிழ்க் கட்­சி­க­ளுக்கு ஏற்­க­னவே வேண்­டுகோள் விடுத்­துள்ளோம். 

தமிழ்க் கட்­சிகள் யதார்த்தத்தை உணர்ந்து சகல உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் ஸ்திர­மான நிர்­வா­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தமது ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்டும் என்­ப­துதான் அந்த வேண்­டுகோள். அதே ஒத்­து­ழைப்பை தேவைப்­படும் மன்­றங்­க­ளுக்கு தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு வழங்கத் தயா­ராக இருக்கும். 

இப் பின்­ன­ணியில் அனை­வரும் பொறுப்­பு­ணர்­வுடன் சிந்­தித்தால் எமது மக்­க­ளுக்கு அவர்கள் வாழு­கின்ற பிர­தே­சங்கள் சம்­பந்­தப்­பட்ட உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஸ்திர­மான நிர்­வா­கத்தை உறு­திப்­ப­டுத்த முடியும் என்று நாங்கள் நம்­பு­கின்றோம். 

இதே­வே­ளை எமது மக்­க­ளு­டைய தேசிய பிரச்­சி­னைக்கும் அடிப்­படை அர­சியல் பிரச்­சி­னைக்கும் நீதி­யா­னதும் நிரந்­த­ர­மா­ன­து­மான தீர்வு ஒன்­றினை நோக்­கிய எங்­களின் பயணம் எந்­த­வி­தத்­திலும் தடைப்­பட்டு விடாமல் தொட ர்ந்தும் உறு­தி­யோடும் உத்­வே­கத்­தோடும் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு ஏது­வாக தமிழ்த் தேசியக் கட்­சிகள் அனைத்தும் புரிந்­து­ணர்­வுடன் பொது கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் இணைந்து செயற்­ப­டு­வ­தற்கு நாங்கள் அழைப்பு விடுக்­கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் அங்­கத்­துவக் கட்சி என்ற அடிப்­ப­டையில் இந்த அழைப்­பினை நாங்கள் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் விடுக்­கின்றோம். ஏற்­க­னவே இத்­த­கைய வேண்­டுகோள் தேர்தல் முடிந்த கையோடு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சார்பில் விடுக்­கப்­பட்­டி­ருந்­ததை அனை­வரும் அறி­வார்கள். 

அர­சியல் தீர்வு விட­யத்தில் தமிழ்த் தேசியக் கட்­சி­க­ளுக்­கி­டை­யிலே வேறு­பா­டுகள் கிடை­யாது. இலங்கை என்ற ஒரே நாட்­டுக்­குள்ளே நீதி­யான அர­சியல் தீர்வை ஏற்­ப­டுத்­து­வ­தாக இருந்தால் எமது மக்கள் வாழு­கின்ற எமது தாயகத்­திற்கு பூரண சுயாட்சி வேண்டும் என்­கின்ற கோரிக்கை தொடர்பில் தமிழ்க் கட்­சிகள் மத்­தி­யிலே அடிப்­ப­டை­யிலே வேறு­பா­டுகள் கிடை­யாது. 

இந்த சுயாட்சி, சமஷ்டி ஆட்­சியின் அடிப்­ப­டையில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்­பதில் வேறு­பாடு கிடை­யாது. ஆகவே தான் நாங்கள் ஏனைய தமிழ்க் கட்­சி­களை வேண்­டிக்­கொள்­வது எல்லாம் நாங்கள் விரை­வாக ஒரு பொது கொள்கைத் திட்­டத்தின் அடிப்­ப­டையில் அர­சியல் தீர்வை வென்­றெ­டுப்­ப­தற்கு ஏது­வாக ஒன்­று­பட்டு செய­லாற்ற வேண்டும் என்­பது தான். 

கடந்த காலங்­களில் பல்­வேறு வே­று­பா­டுகள் இருந்­தாலும் கூட தமிழ்க் கட்­சிகள் ஒன்­று­பட்டு செய­லாற்­றிய பல்­வேறு சந்­தர்ப்­பங்கள் இருந்­த­மையை நினைவுபடுத்­து­கின்றேன். எத்­தனை முரண்­பா­டுகள்,மோதல்கள் இருந்­த­போதும் கூட எமது மக்­களின் நல­னுக்­காக அர­சியல் ரீதி­யிலே நாங்கள் ஒன்­று­பட்டுக் குரல் கொடுத்­தி­ருக்­கின்றோம். 

இது 1990 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து வந்­தி­ருக்­கின்­றது. இந்தப் பின்­ன­ணியில் எங்­க­ளு­டைய வேண்­டுகோள் தமிழ் மக்கள் எம்­மிடம் எதிர்­பார்க்­கின்ற அந்தக் கட­மையின் அடிப்­ப­டை­யிலே நாங்கள் விரைவாக ஒரு பொது வேலை த்­திட்­டத்தில் ஒரு பொது கொள்கைத் திட்­டத்தை வகுத்து அந்த அடிப்­ப­டையில் தென்­னி­லங்­கைக்கும் இலங்கை அர­சுக்கும் அர­சி­யல்­தீர்வு விடயத்­திலே ஒன்­றாக அழுத்தம் கொடுப்­ப­தற்கு உட­னடி நட­வ­டிக்­கையில் இறங்­க­வேண்டும் என்­ப­துதான். 

தென்­னி­லங்­கையில் ஸ்திர­மற்ற அர­சியல் நடக்­கின்­றது எது? எப்­போது? நடை­பெறும் என்று ஆருடம் கூற­மு­டி­யாது. அது எப்­ப­டிப்­போ­னாலும் கூட ஏற்­க­னவே முன்­னெ­டுக்­கப்­பட்ட அர­சியல் தீர்வு முயற்­சிகள் தொடர்ந்தும் முன்­னெ­டுக்­கப்­பட வேண்டும் என்­ப­துதான் எங்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு. 

அதே நேரத்தில் இந்த அர­சியல் தீர்வு முயற்­சிகள் தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்­டிலே நீதி­யான அர­சியல் தீர்­வுக்கு வழி­ச­மைக்­குமா என்­பது தொடர்பில் ஆரம்­பத்தில் இருந்தே எங்­க­ளுக்கு பாரிய சந்­தேகம் உள்­ளது. இந்த சந்­தேகம் இப்­போதும் இருக்­கி­றது. 

இருந்­தாலும் கூட இந்த பொறி­மு­றைக்கு ஊடாக செல்­ல­வேண்­டிய கட்­டாயம் இருக்­கி­றது என்ற கார­ணத்­தினால் ஒரே நாட்­டுக்­குள்ளே அர­சியல் தீர்­வுக்கு தயா­ராக இருக்­கின்றோம் என்று நாங்கள் கூறிக்­கொண்­டி­ருக்கும் பின்­ன­ணி யில் இந்த அர­சியல் தீர்வு முயற்­சி­யினை நாங்கள் ஒரு­போதும் புறந்­தள்ள முடி­யாது என்­கின்ற அர­சியல் யதார்த்­தத்தின் கார­ண­மா­கவும் இந்த முயற்­சி­களில் நாங்கள் தொடர்ந்தும் ஈடு­ப­ட­வேண்­டிய தேவையும் கட்­டா­யமும் இருக்­கின்­றது. 

ஆகவே இந்த முயற்­சி­களை கூட்­டாக எதிர்­கொள்­வது அர­சியல் தீர்வு நட­வ­டிக்­கை­களில் தமிழ் இனத்தின் குரல் ஒன்­றாக ஒலிப்­ப­தற்கு ஏது­வாக தமிழ் தேசி யக் கட்­சிகள் அனைத்தும் ஒரு பொது வேலைத் திட்­டத்தின் கீழ் செயற்­ப­டு­வ­தை­யிட்டு உட­ன­டி­யாக சிந்­திக்க வேண்டும், செயற்­பட முன்­வ­ர­வேண்டும் என நாங்கள் வேண்­டுகோள் விடுக்­கின்றோம். 

எமது மக்­களும் இதைத்தான் எதிர்­பார்க்­கி­றார்கள். எங்­க­ளுக்குள் ஆயிரம் வேறு­பா­டுகள் இருக்­கலாம். ஆனால் இந்த அடிப்­படைப் பிரச்­சி­னை­யிலே நாங்கள் ஒரே குரலில் பேச­வேண்டும். ஒரே கோரிக்­கையை முன்­வைக்க வேண்டும். அப்­படி நாங்கள் செயற்­பட்டால் மாத்­தி­ரமே நாங்கள் எதிர்­பார்க்­கி ன்ற அர­சியல் தீர்வு தொடர்பில் தேவை­யான நட­வ­டிக்­கைகளை உரிய நேர த்தில் எடுத்­த­வர்­க­ளாக கரு­தலாம்.

ஒரு­வேளை இந்த அர­சியல் ­தீர்வு முயற்­சிகள் பலரும் கூறி­யது போல் முறிக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அல்­லது சிதை­யு­மாக இருந்தால் நாங்கள் தொடர்ந்து காலத்தை வீண­டித்துக் கொண்­டி­ருக்க முடி­யாது. அடுத்­தது எவ்­விதம் நாங்கள் சுய­நிர்­ணய உரி­மையை வலி­யு­றுத்தி எம­து­ மக்­க­ளுக்கு நீதியை பெற்­றுக்­கொ­டுக்கப் போகிறோம் என்­பது பற்­றியும் சிந்­திக்க வேண்டும். 

இத்­த­கைய பிரச்­சினை எழும் போது சிந்­தித்­து­ செ­யற்­பட முடியும். இப்­போது எங்­க­ளுக்­குள்ள பிர­தான கேள்வி தேர்தல் முடிந்து விட்­டன.தேர்­தல்கள் வரும், போகும். இது உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல். இத் தேர்தல் முடி­வு­களை எவரும் தங்­க­ளுக்கு ஏற்­ற­படி அல்­லது விரும்­பு­கி­ற­படி வியாக்­கி­யானம் செய்ய முடி யும். 

அது சம்­பந்­தப்பட் அந்தத் தரப்­பு­களின் விருப்பம்.அதிலே யாரும் தலை­யி­ட­மு­டி­யாது. ஆனால் நாங்கள் பிரிந்து நின்ற கார­ணத்­தினால் பேரி­ன­வாதக் கட்­சிகள் தமிழ்த் தேசத்தின் அர­சியல் பரப்பில் ஊடு­ருவி இருக்­கின்­றன. அவர்கள் தமிழ் மக்­களின் வாக்­கு­களை பல்­வேறு யுத்­தி­களை பயன்­ப­டுத்தி கவர்ந்­தி­ழுக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. 

இதனால் உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஸ்திர­மற்ற நிலை ஏற்­பட்­டுள்­ளது. ஆனால் ஸ்திர­மான நிர்­வா­கத்தை நிறு­வு­வதில் தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் எதுவும் பேரி­ன­வாதக் கட்­சி­களின் ஆத­ரவில் தங்கி நிற்­பது அல்­லது ஆத­ரவை கோரு­வது சிந்­த­னைக்கு அப்­பாற்­பட்­ட­தாகும். இது ஒது பார­தூ­ர­மான விவ­காரம் ஆகும். 

ஆனால் யதார்த்தம் வேறா­க­வுள்­ளது. ஸ்திர­மான நிர்­வாகம் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்குத் தேவை. அது மக்­களின் எதிர்­பார்ப்பு.அதனைக் கொடுக்க வேண்­டி­யது தமிழ் மக்­களின் வாக்­கு­களை பெற்ற தமிழ்த் தேசியக் கட்­சி­களின் கடமை. ஆகவே நாங்கள் பொறுப்­பு­ணர்வை கைவிட்டு குறு­கிய அர­சியல் இலா­பங்­க­ளுக்­காக இரண்டு ஒரு சபை­களை கைப்­பற்­று­வ­தற்­காக தொலை­தூர நோக்கம் இன்றி செயற்­ப­டு­வோ­மாக இருந்தால் பேரி­ன­வாதக் கட்­சிகள் தங்­களின் அர­சியல் இருப்பை இங்கே தொடர்ந்து பலப்­ப­டுத்­திக்­கொள்ள முடியும் என்­ப­தையும் நாங்கள் மறந்­து­வி­டக்­கூ­டாது. 

ஆக­வேதான் நாங்கள் ஒன்றுபட்டு சிந்­தித்து செயற்­ப­டு­மாறு தமிழ் அர­சியல் கட்­சி­க­ளுக்கு குறிப்­பாக வட,­கி­ழக்கை தளமாக கொண்டு இயங்கிக் கொண்டி ருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். 

இதன் அர்த்தம் அனைவரையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்து சேருங்கள் என்பதல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கதவுகள் எந்நேரமும் திறந்தவண்ணமுள்ளன. எந்தக் கட்சிகளும் இணையலாம். அதை நாங்கள் தேர்தலின்போதே தெரிவித்துள்ளோம். 

அதற்கு முன்னரும் கூறியுள்ளோம். தற்போதும் கூறுகின்றோம். ஆனால் அத ற்கு அப்பால் ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒரு பொது நிலைப்பாட்டின் அடிப்படையில் எமது மக்களுக்கான அரசியல் நீதியை வென்றெடுப்பதற்கு ஏதுவாக ஒரு கொள்கைத் திட்டத்தை வகுத்து மக்களுக்கு விசுவாசமாக செயற்பட வேண்டும் என்பது தான் எமது எதிர்பார்ப்பு. 

இவ் வேண்டுகோளுக்கு சாதகமான பதிலை நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்றார். இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியின் அரசியல் தலைவ ரும் வடமாகாண உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம், குகதாஸ் ஆகியோ ரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.