13, 374 நிலையங்களில் நாளை வாக்கெடுப்பு.!
நாடு முழுவதும் 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு 8356 பிரதி நிதிகளை தெரிவு செய்வதற்கான உள்ளூராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்பு நாளை சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
8356 பிரதிநிதிகளை உள்ளூராட்சிமன்றங்களுக்கு தெரிவு செய்ய 57256 வே ட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்றனர். 13, 374 வாக்களிப்பு நிலையங்களில் நாளைய தினம் தேர்தல் வாக்களிப்பு நடைபெறவுள்ளது. நாளை நடைபெறவுள்ள தேர்தல் வாக்களிப்பில் ஒரு கோடியே 57 இல ட்சத்து 60867 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்தல் செயலகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் காலை வேளையிலேயே வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களித்துவிட்டு வருமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை வழக்கு நடவடிக்கை காரணமாக எல்பி்ட்டிய பிரதேச சபைக்கு தேர்தல் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை புதிய வட்டார மற்றும் விகிதாசார முறை என கலப்பு முறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும். அதாவது தொகுதி மூலம் 60 வீதமான உறுப்பினர்களும் விகிதாசாரம் மூலம் 40 வீதமான உறுப்பினர்களும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்கள்.
மேலும் விருப்பு வாக்கு முறைமை இந்த தேர்தல் முறையில் இல்லை என்பதுடன் பெண்களுக்கான இட ஓதுக்கீடு 25 வீதமாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
தேர்தலில் 57256 வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக களமிறங்கியுள்ளனர்.
நாட்டில் மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும், 24 மாநகர சபைகளும், நாற்பத்தொரு உள்ள நிலையிலேயே அவற்றுக்கு இன்றைய தினம் தேர்தல் நடைபெறுகின்றது.
சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் நடை பெறும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், முப்படையினரை உள்ளடக்கியதாக இந்த பரந்த பாதுகாப்பு கட்டமைப்புடன் கூடிய நடவடிக்கை நேற்று 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்துள்ளன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் 4178 பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65758 பொலிஸ் அதிகாரிகள், உத்தியோகத்தர்களைக் கொண்ட படையணி கடமையில் ஈடுபடுத்தப்படும்.
அவர்கள் நேற்று அந்தந்த பொலிஸ் அத்தியட்சர் பிரிவுகளுக்கு சென்று கடமைகளைப் பொறுப்பேற்று இன்று முதல் தேர்தல் கடமைகளில் குறிப்பிட்ட பகுதிகளில் பணியில் ஈடுபடுவர்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படை வீரர்களுக்கு மேலதிகமாக பொலிஸ் கலகமடக்கும் பிரிவின் வீரர்கள் 1106 பேரும் பொலிஸ் பாதுகாப்பு உதவியாளர்கள் 1320 பேரும் உள்ளடங்குவதாகவும் இவற்றுக்கு மேலதிகமாக சிவில் பாதுகாபபு திணைக்களத்தின் 5953 பேர் கொண்ட படையணியினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அடையாளம் காணப்பட்ட 155 இடங்களில் இராணுவ பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் அது தொடர்பில் 855 முப்படை வீர ர்கள், பாதுகபபுப் படையணிகளின் கட்டளைத் தலைமையகத்தின் வழி நடத்த லில் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
அவசர நிலைமையொன்றினை எதிர்கொள்ளும் விதமாக மேலும் 6000 முப்படை வீரர்களைக் கொண்ட பாதுகாப்பு படையணி நாடளாவிய ரீதியில் பல இடங்களை மையப்படுத்தி தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க வாக்களிப்பு நிலையத்துக்கு யார் வரலாம் என்பது தொடர்பான அறிவித்தலை தேர்தல் செயலகம் விடுத்துள்ளது. அதன்படி குறி த்த வாக்கெடுப்பு நிலையத்தின் வாக்காளர்கள், வாக்கெடுப்பு நிலைய உத்தியோகத்தர்கள், வேட்பாளர்கள், (தமது வட்டாரத்தின் வாக்கெடுப்பு நிலையத்திற்கு மட்டும்) வாக்கெடுப்பு நிலைய முகவர்கள்,
கண்காணிப்பாளர்கள், கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பொலிஸ் அதிகாரிகள், தெரிவித்தாட்சி அலுவலர்கள், தெரிவத்தாட்சி அலுவலர்களின் அனுமதியைப் பெற்றுள்ள நபர்கள் ஆகியோர் மட்டுமே வாக்களிப்பு நிலைய வளாகத்திற்குள் செல்ல முடியும்.
எந்தவொரு வேட்பாளரும், வாக்கெடுப்பு நிலையத்திற்குள் அல்லது வாக்களிப்பு நிலைய சுற்று சூழலில் தரித்திருந்த கட்சி மற்றும் வேட்பாளர் ஊக்குவிப்பு செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.
மேலும் வாக்கெடுப்பு நிலையத்துக்குள் சில செயற்பாடுகள் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் செயலகம் அறிவித்துள்ளது. கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தல், புகைப்படங்களை எடுத்தல், வீடியோக காட்சிகளை எடுத்தல், சுடுகலன்களை வைத்திருத்தல், மற்றும் புகைப்பிடித்தல், மதுபானம், போதைப்பொருள் பாவனை ஆகியனவும் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளன.
தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை நடைபெறும். 4.30 மணிக்கு வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிகக்ப்படும். . 6 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து அந்தந்த வாக்கு எண்ணும் நிலையங்களில் முடிவை அறிவிக்க முடியும். வாக்களிப்பு நிலையங்களிலேயே வாக்கு எண்ணும் நடவடிக்கை இடம்பெறும். இம்முறை தபால் மூல தேர்தல் முடிவுகள் வெ ளியிடப்படாது. மாறாக தபால் மூல வாக்குகளும் வாக்கெடுப்பில் பெறப்பட்ட வாக்குப் பெட்டிகளில் கொட்டப்பட்டு எண்ணப்படும் என்று அறி்விக்கப்பட்டுள்ளது.
வழமைபோன்று தேர்தலில் வாக்களிப்பு அடையாள அட்டையை கொண்டு செல்லவேண்டியது அவசியமாகும். அதாவது தேசிய அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியான கடவுச்சீட்டு, முதியோர் அடையாள அட்டை, ஓய்வூதிய அடையாள அட்டை, மத குருக்களுக்கான அடையாள அட்டை, தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அடையாள அட்டை ஆகியனவே தேர்தலுக்கான செல்லுபடியான அடையாள அட்டைகளாகும்.
இதேவேளை உள்ளூராட்சிமன்ற தேர்தலின்போது எக்காரணம் கொண்டும் வெ ளிநாட்டு கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்நாட்டில் இரண்டு கண்காணிப்பு அமைப்புக்களுக்கு தேர்தலை கண்காணிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலை யில் தேர்தல் விதிமுறை படி 07 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிர ச்சாரப் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வந்தன. கடந்த 2012 ஆம் ஆண்டு முத லில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை மாற்றி புதிய கலப்பு முறையில் தேர்தலை நடத்துவதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆரம்பத்தில் செய்யப்பட்ட எல்லை நிர்ணயங்களில் சிக்கல் இருப்பதாக கட்சிகள் சுட்டிக்காட்டின. அதன் பின்னர் மீண்டும் அந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் இரண்டு வருடங்களுக்கு மேல் தாமதமடைந்தது. இறுதியில் கடந்த வருடத்தின் இறுதி பகுதியில் இறுதி சட்டம் நிறைவேற்றப்பட்ட புதிய தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்த லின் போது நாட்டில் முன்னூற்று முப்பத்தைந்து உள்ளூராட்சி மன்றங்கள் இருந்ததுடன் அம்மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று எண்பத்தாறு உறு ப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.