“அது மட்டும் போதாது” - “அது அவ்வளவு இலகு அல்ல - சரத் பொன்சேக்கா.!
“முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் குடியுரிமையைப் பறித்தால் மட்டும் போதாது” என்று, ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா விவரித்துள்ளார்.
ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரி வித்திருந்தார்.
“நாட்டின் முன்னேற்ற த்துக்குத் தடையாக இருப்பவர்களு க்கு எதிராக தற்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கடும் நடவடி க்கை எடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதியின் குடியுரிமையைப் பறி ப்பதோடு நின்றுவிடாது அவர் மீது மிகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என சரத் பொன்சேக்கா மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, தமது குடியுரிமையைப் பறிப்பது ஒன்றும் அவ்வளவு இலகுவா னது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர், “என் மீது வீண்பழி சுமத்துபவர்களும் அவமதிப்பவர்களும் அடுத்த வருடம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்பதை மறந்து விட்டார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.