ஊஞ்சலாடிய சிறுமி கயிறு இறுகி மரணம் - யாழ். கோப்பாயில் !
யாழ்ப்பாணத்தின் கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் ஊஞ்சலில் விளையா டிக் கொண்டிருக்கையில் கழுத்தில் கயிறு இறுகியதால் சுவாசத்தடை ஏற்ப ட்டு உயிரிழந்துள்ள சம்பவமானது, அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
இச் சம்பவமானது நேற்றைய தினம் (04.02.2018) இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவருகையில், யாழ். கோப்பாய்ப் பகுதியைச் சேர்ந்த, 9 வயதுடைய சிவ நேசன் அக்சயனி என்ற சிறுமியை தூங்க வைத்து விட்டு, பெற்றோர் சந்தைக்கு சென்றுள்ளனர்.
சந்தைக்கு சென்று திரும்பி வந்த பெற்றோர், குறித்த சிறுமி கட்டிலில் காணா மையினால் தேடியபோது, கழுத்துப் பகுதி இறுகிய நிலையில், சிறுமி ஊஞ்ச லில் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து, பெற்றோர் சிறுமியை யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
எனினும் சிறுமி வைத்தியாலைக்குச் செல்ல முன்னரே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமியின் சடலத்தினை உட ற்கூற்று பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.