Breaking News

தேசிய அரசாங்க விடயத்தில் புதிய விடயத்தை தெரிவித்த சபாநாயகர்.!

தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றி ணைந்து செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

ஆகையால் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்கலும் இல்லையென தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ள தாக சபாநாயகர் கரு ஜயசூரிய சபை யில் பாராளுமன்றத்தில் இன்று தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வது தொடர்பான வாக்கு வாத த்தின் போது சபாநாயகர் மேற்கண்டவாறு விவாதித்துள்ளார். தேசிய அரசா ங்கத்தை தொடர்ந்து கொண்டு செல்வதாயின் ஒப்பந்ததை பாராளுமன்றத்தி ற்குச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையேல் தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்ல முடியாதென கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, சந்திசிறி கஜதீர ஆகியோரும் மக்கள் விடுதலை முன்ன ணியின் பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸவும் வலியுறுத்தினர்.

எனினும் எதிர்க்கட்சிகளின் வாதத்தை சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷமன் கிரியெல்ல முழுமையாக புறக்கணித்தார். இந்நிலையில் இந்த வாக்குவாதத்தில் சபாநாயகர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கையில், தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இரு பிரதான கட்சிகளும் ஒன்றிணைந்து பய ணிப்பதாக தெரிவித்துள்ளன.

ஆகவே தேசிய அரசாங்கத்தை கொண்டு செல்வதில் எந்தவொரு சட்ட சிக்க லும் இல்லையென தனக்கு சட்ட ஆலோசனை வழங்கப்பட்டுள்ளன என்றார்.