நாட்டின் நிலைமையினால் அமெரிக்கா கவலை - விரைந்து செயற்பட அரசாங்கத்திற்கு அறிவுரை
இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை தொடர்பில் கவலை தெரிவித்திருக்கும் அமெரிக்கா, மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரங்களை பாதுகாத்து அவசரகால நிலையை விரை வில் முடிவுக்கு கொண்டு வருமாறு அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கி யுள்ளது.
இது தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு விவரித்துள்ளது.
அவ் அறிக்கையில் மேலும் விவரிக்கையில் நாட்டின் அமைதியான சகவாழ்வுக்கு சட்ட ஆட்சி, மனித உரிமைகள் மற்றும் சமத்துவம் என்பன அத்தியாவசிய மாகும். மதம் சார்பான பிரிவினைவாத வன்முறை சம்பந்தப்பட்ட குற்றவாளி களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுடன் மத ரீதியான சிறுபான்மையின ரையும் அவர்களது வழிபாட்டு தலங்களை பாதுகாக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல், அனைவரினதும் மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திர ங்களை பாதுகாக்கும் அதேநேரம், தற்போது நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவ சரகால நிலையை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கும் இலங்கை அரசாங்கம் விரைந்து செயற்பட வேண்டியது முக்கியமாகுமென அவ்வறி க்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.