Breaking News

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை சிக்கலில்....!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­திரக் கட்­சியின் ஒரு சிலரின் கை யொப்­பத்­தினை பெற்­றதன் பின்னர் சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்க கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. 

எனினும் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கூட்டு எதிர்க்­கட்­சி க்குள் கருத்து முரண்­பா­டுகள் இருப்­ப­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. இதன்­படி ஆளும் கட்­சி­யி­னரின் கையொப்பம் இல்­லாமல் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் கையொப்­ப­மிட மாட்டோம் என ஒரு தரப்பும் பிரே­ணைக்கு ஆளும் கட்­சி­யி­னரின் கையொப்பம் அவ­சி­ய­மில்லை என ஒரு­த­ரப்பும் கூறி­யுள்­ள­மை­யினால் சிக்­க­லான நிலைமை காணப்பட்டுள்ளது. 

எனினும் ஒரிரு தினங்­களில் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளிக்க கூடும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழுக் கூட்டம் நேற்று காலை பாரா­ளு­மன்ற கட்­டத்­தொ­கு­தியில் நடை­பெற்­றது. 

இக் கூட்­டத்­திற்கு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கலந்து கொண்­டுள்­ளனர். இந்த கூட்­டத்தின் போது பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

இதன்­படி இந்த பிரே­ர­ணைக்கு ஆளும் கட்­சியில் அங்கம் வகிப்­போரின் கையொப்­பத்தை பெற்­றுக்­கொள்­வது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டுள்­ளது. எனினும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தொடர்பில் கூட்டு எதி­ரக்­கட்­சிக்குள் இரு வேறு கருத்­துகள் நில­வு­வ­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. 

இதன்­படி இதன்­படி ஆளும் கட்­சி­யி­னரின் கையொப்பம் இல்­லாமல் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் கையொப்­ப­மிட மாட்டோம் என ஒரு தரப்பும் பிரே­ணைக்கு ஆளும் கட்­சி­யி­னரின் கையொப்பம் அவ­சி­ய­மில்லை என ஒரு­த­ரப்பும் கூறி­யுள்­ள­மை­யினால் சிக்­க­லான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. 

இதன்­பி­ர­காரம் பிர­சன்ன ரண­துங்க, ரமேஷ் பதி­ரண,நிமல் லன்சா மற்றும் குமார வெல்­கம ஆகியோர் ஆளும் ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்­திரக் கட்­சி­யி­னரின் கையொப்பம் இல்­லாமல் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை கொண்டு வரு­வதில் பிர­யோ­சனம் இல்லை என்ற கருத்து ஆத­ரவு வழங்­கி­யுள்­ளனர். 

எனினும் டலஸ் அழ­க­பெ­ரும, மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே ஆகியோர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு ஆளும் கட்­சியை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­வோரின் கையொப்பம் அவ­சி­ய­மில்லை. ஏனெனில் அது அவர்­க­ளுக்கு சிக்­கலை ஏற்­ப­டுத்தும். நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு வாக்­க­ளித்தால் மாத்­திரம் போது­மா­னது. அவர்­க­ளது கையொப்பம் அவ­சி­ய­மில்லையெனத் தெரிவித்துள்ளாா்.

இதன்­பி­ர­காரம் உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் வெற்றி பெற்­றதன் பின்னர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை தோல்வி அடைந்­ததால் அது கூட்டு எதிர்க்­கட்­சிக்கு பாதிப்­பாக அமையும் என்றே ஒரு தரப்­பினர் தெரிவித்துள்ளனா். 

அத்­துடன் இதன்­போது கூட்டு எதிர்க்­கட்­சியின் இரு பிர­தான தலை­வர்கள் தற்­போ­தைக்கு நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை அவ­சி­ய­மில்லை என்று கூறி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. எவ்­வா­றா­யினும் தற்­போ­தைக்கு கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் 51 பேர் நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை க்கு கையொப்­ப­மிட்­டுள்­ள­தா­கவும் இன்னும் நால்வர் கையொப்­ப­மிட வேண்­டி­யுள்­ள­தா­கவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

அத்­துடன் சுதந்­திரக் கட்­சி­யினர் ஒரு சிலர் கையொப்­ப­மி­ட­வுள்­ள­தா­கவும் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை இரவு அவர்­க­ளது கையொப்­பத்தை பெற்­றுக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை கூட்டு எதிர்க்­கட்சி முன்­னெ­டுத்­தது. என்றாலும் சுதந்திரக் கட்சியின் ஒரு சிலர் தனது தீர்மானத்தை மாற்றியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிப்ப தற்கான நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் கூட்டு எதிர்க்கட்சியில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. எனினும் ஒரிரு தின ங்களில் குறித்த பிரேரணை கையளிக்கப்படலாமென எதிா்பாா்க்கப்படுகின்றது.