வெலிக்கடை சிறைக் கலவரம் : பிரதான சாட்சியாளரின் ரிட் மனு தள்ளுபடி.!
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் கட ந்த 2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற கலவரம் மற்றும் அதன்போது கொலை செய்யப்பட்ட 27 கைதிகள் தொடர்பிலான விசாரணைகள் குற்றப் புலனா ய்வுப் பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டு ள்ளதாக கூறப்படும் நிலையில், அது தொடர்பில் விசாரணை செய்யக் கோரும் ரிட் மனுவை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்றுத் தள்ளுபடி செய்தது.
வெலிக்கடை கலவரத்தின் பிரதான சாட்சியாளர் ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவே, தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை காரணமாக கொண்டு, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதிபதி ப்ரித்தி பத்மன் சுரசேன, சிரான் குணரத்ன ஆகியோரடங்கிய நீதிபதிகளால் தள்ளுபடி செய்ய ப்பட்டது.
கடந்த 2012 நவம்பர் மாதம் வெலிக்கடை சிறையில் இடம்பெற்ற கலவரம் மற்றும் அதில் கொல்லப்பட்ட 27 பேர் தொடர்பில் விபரமான விசாரணை ஒன்றினை முன்னெடுக்க பொலிஸ்மா அதிபருக்கும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளருக்கும் உத்தரவிடக் கோரும் ரிட் மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே, அம்மனு இவ்வாறு தள்ளுபடி செய்யப்பட்டது.
நேற்றைய விசாரணைகளின் போது மன்றில் பிரசன்னமாகியிருந்த சிரேஷ்ட அரச சட்டவாதி மாதவ தென்னக்கோன், இந்த விவகாரத்தில் தற்போதும் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில் இந்த மனுவை முன்கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை.
இதனை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.