பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க இராணுவம் முடிவு!
பிரித்தானியாவிலுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்பத்தி னரின் தேவைகளுக்காக நிதி உதவி வழங்க இலங்கை இராணுவம் தீா்மானம் எடுத்துள்ளது.
இராணுவத் தளபதியின் உத்தரவின் படி இத் தீர்மானம் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இலங்கைக்கு அழை க்கப்பட்ட போதிலும் அவரது குடும்ப த்தினர் இன்னமும் பிரித்தானியாவில் வாழ்ந்து வருகின்றனர்.
பிரியங்க நாட்டுக்கு அழைக்கப்பட்டமையினால் தூதரக பணிக்காக அவருக்கு கிடைக்க வேண்டிய சம்பளம் கிடைக்கவில்லை. தற்போது அவருக்கு பிரிகேடி யர் பதவிக்கான சம்பளம் மாத்திரமே கிடைக்கின்றது.
அதற்கமைய முதற்கட்டமாக இராணுவ தளபதியின் உத்தரவுக்கு அமைய பிரியங்கர பெர்னாண்டோவின் குடும்பத்தினருக்கு நிதி உதவி வழங்கப்பட்டு ள்ளது.
ஒவ்வொரு மாதமும் அவருக்கு நிதி உதவி வழங்க திட்டமிடப்பட்டு ள்ளது.
ராஜதந்திர ரீதியான சம்பவம் ஒன்றுக்கு முகம் கொடுத்துள்ள இராணுவ அதி காரியின் குடும்பத்திற்காக இந்த முறை இராணுவம் நிதி உதவி வழங்கும் முதல் சந்தர்ப்பம் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.