கேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....! - THAMILKINGDOM கேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....! - THAMILKINGDOM
 • Latest News

  கேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....!

  கேப்பாபுலவு படைமுகாம் வாயில் அமைந்துள்ள அண்மித்த பகுதியில் உள்ள தேக்கங்காட்டு வனப்பகுதியில் இன்று (25-04-2018) புதன்கிழமை மதியம் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

  இன்று இரண்டாவது தடவையாக இத் தீ பரவியுள்ளது. கடும் வெய்யில் கார ணமாக இத் தீ விபத்து ஏற்பட்டிருக்க லாமென சந்தேகித்தாலும் தேக்க மர ஞ்சோலைகளில் கீழ் உள்ள காய்ந்த இலைகள் மற்றும் பற்றைகள் தீயி னால் எரிந்து சாம்பலாகியுள்ளன.

  இந்த நிலையில் அருகில் உள்ள படை முகாம்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு படையினர் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையினை முன்னெ டுத்துள்ளார்கள். இத் தீ விபத்தினால் 25 ஏக்கர் வரையான தேக்கங்காடுகள் எரி ந்துள்ளன.

  தீ விபத்தினை அடுத்து அந்த பகுதியில் நிலைகொண்டுள்ள 59 ஆவது படைப் பிரிவினர் தண்ணீர் பாச்சி தீயினை பரவ விடாமல் கட்டுக்குள் கொண்டு வந் துள்ளார்கள். இதில் குறிப்பாக 50 ற்கும் மேற்பட்ட படையினர் ஈடுபட்டு நீர் தாங் கிகள் கொண்டு நீரினை பாய்ச்சி குறித்த தீயினை கட்டுப்பாட்டிற்குள் படையி னா் கொண்டு வந்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: கேப்பாபுலவில் தேக்க மர வனத்தில் தீ விபத்து....! Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top