Breaking News

படுகொலைகளிற்கான STF அதிகாரிகளின் பட்டியலை ஐ.நா விடம் கையளித்த ITJP

ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிரடிப்படை பொலிசா ரினால் மேற்கொள்ளப்பட்ட மனித குலத்திற்கு எதிராக கொடூரங்களுடன் தொடர்புடைய அதிகாரிகளின் பெயர் விபரங்கள் அடங்கிய பட்டியலொன்றை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளது.

ITJP என்ற ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமை ப்பு இப் பட்டியலை வழங்கியுள்ளது டன், அந்த அமைப்பு நேற்றைய தினம் லண்டனில் வைத்து வெளியிட்ட அறி க்கையொன்றில் வெள்ளைவான் கட த்தல்கள், சட்டத்திற்கு புறம்பான படு கொலைகள் மற்றும் பாலியல் வன் கொடுமைகள் உள்ளிட்ட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்களை விசேட அதிரடிப்படை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட் டுள்ளது. 

ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போரின் போது போர் குற்றங்கள் உட் பட மனித குலத்திற்கு எதிரான கொடூரங்கள் நடைபெற்றுள்ளதாக உறுதிப்படு த்திய ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையை தயாரிக்கும் குழுவான தாரு ஸ்மன் குழுவில் நடைபெற்றிருந்த சர்வதேச சட்டவல்லுநரான யஸ்மின் சூகா தலைமையிலான ஸ்ரீலங்காவின் நீதிக்கும் நியாயத்திற்குமான சர்வதேச அமைப்பு நேற்றைய தினம் லண்டன் நகரிலுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடத்திய ஊடகவியாளர் சந்திப்பில் புதிய அறிக்கையை வெளியிட்டு வைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்ளாது தடை செய்யப்பட வேண்டியவர்கள் என்று ஸ்ரீலங்காவின் விசேட அதிரடிப் படை பொலிஸ் சேவையில் பணியாற்றும் ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய இரகசிய பட்டியலொன்றையும் ஐக்கிய நாடுகள் சபையிடம் கையளித்துள்ளதாக நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கு முன்னர் ஸ்ரீலங்காவின் எஸ்.ரி.எப் என்றழைக்கப்படும் விசேட அதிர டிப்படை பொலிஸ் சேவையில் பணியாற்றிய சிங்கள அதிகாரிகள் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட துணை ஆயுதக் குழுக்களைச் சேர்ந்த தமிழர்கள் ஆகியோர் வழங்கிய ரகசிய வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு “ஸ்ரீலங்காவில் விசேட அதிரடிப்படை பொலிசார்” என்ற புதிய அறி க்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தெரிவித்துள்ளது.

இவ் அறிக்கையை தயாரிப்பதற்காக தகவல்களை திரட்டும் போது தெரியவந்த குற்றமிழைத்தவர்களின் பெயர் பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணிக்கான அலுவலகத்திடமும், ஜெனீவாவிலுள்ள ஐ.நா மனித உரிமை கள் ஆணையாளர் அலுவலகத்திடமும் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் ITJP தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அமைதி காக்கும் படையணிக்காக ஸ்ரீலங்கா படை அதிகாரிகளையும் படை யினரையும் தெரிவு செய்யும் போது அவர்களின் பின்புலம் குறித்து ஆராயும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய பொறுப்பை ஐக்கிய நாடுகள் சபை சரிவர நிறைவேற்றத் தவறிவிட்டதாகவும் ITJP குற்றம்சாட்டியுள்ளது.

ஆபிரிக்க நாடொன்றில் பணியாற்றும் ஐக்கிய நாடுகள் அமைதிகாக்கும் படையணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்காவின் STF அதிகாரியொருவர் 2006 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஸ்ரீலங்கா வின் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற அப்பாவி தமிழ் மக்களை படுகொலை செய்த சம்பவத்துடன் குற்றம்சாட்டப்பட்டவர் என ஐ.ரி.ஜே.பி யின் தலைவர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த படை அதிகாரிகளை அமைதிகாக்கும் படையணியில் இணைத்துக்கொள்வதற்கு முன்னர் மேற்கொள்ள வேண்டிய அவர்களின் பின்புலத்தை ஆராயும் முன்கூட்டிய ஆய்வை ஐக்கிய நாடுகள் சபை முறையாக மேற்கொள்ளத் தவறியுள்ளதையே உறுதிப்படுத்துவதாகவும் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

இன்னமும் மன உளைச்சலில் இருந்து விடுபடாத சிங்கள நபர் ஒருவர் தெரி விக்கையில் கொழும்பில் இடம்பெற்ற வெள்ளைவான் கடத்தல்களுடன் தொடர்புபட்டிருந்த குழுவில் இடம்பெற்றிருந்த தனது செயற்பாடுகள் திகிலூ ட்டும் திரைப்படத்தை போன்றது என குறிப்பிட்டதாக யஸ்மின் சூகா தலைமையிலான ITJP தெரிவித்துள்ளது.

போரின் இறுதி நாட்களில் பிடிபட்டவர்களின் கழுத்தை அறுத்ததாகவும், கழு த்தை நெரித்து கொலை செய்ததாகவும், கூரிய கத்திகளால் குத்தியும் வெட்டி யும் கொடூரமாக படுகொலை செய்ததாகவும் யுத்தத்தின் இறுதி கட்டத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் மற்றுமொரு அதிரடிப்படை பொலிஸ் அதிகாரியொருவர் விபரித்ததாக ITJP தெரிவித்துள்ளது.

அதேவேளை தங்களின் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட அனைவரும் இறுதியில் படுகொலை செய்யப்பட்தாகவும் தங்களுக்கு சாட்சியம் அளித்த விசேட அதிரடிப்படை பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்ததாகவும் ITJP தெரிவித் துள்ளது.

ஸ்ரீலங்காவின் ஏனைய படையணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளும் ஆட் கட த்தல்கள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டு வருகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ள போதிலும், STF என்ற விசேட அதிரடி ப்படை பொலிசார் இன்னமும் இவ்வாறான கொடூரங்களில் ஈடுபடுவதற்கான சான்றுகள் தமக்கு கிடைக்கவில்லை என்றும் ITJP தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் கடந்த காலங்களில் பாரதூரமான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள ஸ்ரீலங்கா படையணிகளைச் சேர்ந்த அதிகாரிகள் உட் பட படையினரை பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கும் ஏனைய நாடுகளில் பணிக்கு அமர்த்துவது மிகவும் ஆபத்தானது என்றும் ITJP எச்சரிக்கை விடுத்துள்ளது.

முறையான முன்கூட்டிய ஆய்வு நடத்தப்படவில்லை என்று ஸ்ரீலங்கா வின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களும் முன் வைத்த குற்றச்சாட்டை அடுத்து லெபனானில் பணியாற்றிவரும் ஐக்கிய நாடு கள் அமைதிகாக்கும் படையணியில் இணைந்து கொள்வதற்காக செல்லவிரு ந்த படையணியினதும் அதன் கட்டளை அதிகாரியாக செல்லவிருந்த லெப்டினட் கேணல் வசந்த ஹேவகேயினதும் பயணங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

அதற்குப் பின்னர் ஸ்ரீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் ஸ்ரீலங்கா அரச தலைவருக்கு அனுப்பிவைத்திருந்த கடிதமொன்றில் லெபனா னில் பணியாற்றிவரும் ஐ.நா அமைதி காக்கும் படையணிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள 49 பேரைக் கொண்ட படையணியில் நடைபெற்றுள்ள படை யினர் தொடர்பில் முன்கூட்டிய ஆய்வு நடத்தப்படவில்லை என பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளாா்.

இந்த நிலையில் விசேட அதிரடிப்படை பொலிசாரும் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையணிக்காக இணைத்துகொள்ளப்படுவதால் ஸ்ரீலங்கா இராணு வத்தைப் போல் அவர்களையும் முன்கூட்டிய ஆய்வுக்கு உட்படுத்த வேண்டி யது அவசியம் என ITJP யின் பணிப்பாளர் யஸ்மின் சூகா வலியுறுத்தியுள்ளார்.

விசேட அதிரடிப்படை பொலிசாரினால் இழைக்கப்பட்ட மனித குலத்திற்கு எதி ராக மிக மோசமான கொடூரங்கள் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களினது சாட்சி யங்கள் மாத்திரமன்றி விசேட அதிரடிப்படையில் கடமையாற்றிய பல சிங்கள அதிகாரிகளினதும் சாட்சியங்கள் நிழல்பட ஆதாரங்கள் உட்பட ஏராளமான தக வல்கள் தம்மிடம் இருப்பதாகவும் தெரிவிக்கும் யஸ்மின் சூகா சாட்சியாளர் களுக்கான பாதுகாப்பு என்ற நிபந்தனையின் கீழ் செயற்படத் தயார் எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை யஸ்மின் சூகா தலைமையிலான ITJP வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட படு கொலைகள் தொடர்பான பட்டியலொன்றையும் உள்ளடக்கியிருந்தது.

இதற்கமைய 1984 ஆம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் பிரித்தானிய வெளிவிவகார அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திருந்த அறி க்கையொன்றில், யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் அப்பாவிப் பொது மக்கள் 10 பேர் கொடூரமாக படுகொலையை விசேட அதிரடிப்படையினரே மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதேபோல் 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மட்டக்களப்பு கொக்கட்டிச் சோலையில் 13 அதிரடிப்படை பொலிசார் கொல்லப்பட்டதை அடுத்து 150 பொது மக்கள் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளது. திருகோணமலை யில் 2006 ஆம் ஆண்டு ஐந்து மாணவர்கள் படுகொலையுடனும் விசேட அதிரடி ப்படையினரே தொடர்புபட்டிருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டப்பட்ட தையும் ஐ.ரி..ஜே.பி தெரிவித்துள்ளது.

அதேபோல் 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் திருகோணமலை மூதூர் பகு தியில் வைத்து ஏ.சீ.எப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்து டனும் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பு இருந்ததாக தெரிய வந்து ள்ளதையும் ஐ.ரி.ஜே.பி தெரிவித்தள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலையுடனும், 2012 ஆம் ஆண்டு யூன் 20 ஆம் திகதி வவுனியா சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடனும் விசேட அதிரடிப்படையினருக்கு தொடர்பிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இது மாத்திரமன்றி கடந்த மார்ச் மாதம் கண்டி திகன – தெல்தெனிய பகுதி களில் முஸ்லீம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளின் போது விசேட அதிரடிப்படையினர் வேடிக்கை பார்த்தது மாத்திரமன்றி முஸ் லீம்கள் மீது கொடூரமான தாக்குதல்களையும் கட்டவீழ்த்து விட்டதாக முஸ் லீம் அமைச்சர்களே பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்ததையும் யஸ்மின் சூகா வின் ஐ.ரி.ஜே.பி தெரிவித்துள்ளது.