Breaking News

2020 வரை நல்லாட்சி தொடருமென - எச்.எம்.பௌசி.!

கூட்டு அர­சில் ஒரு சில குழப்­பங்­கள் இருந்­தா­லும் இந்த அரசு மிக­வும் பல­மாக இருக்­கின்­றது. 2020ஆம் ஆண்டு வரை கூட்டு அரசே தொட­ரும். இவ்­வாறு நல்­லி­ணக்க இரா­ஜாங்க அமைச்­சர் எச்.எம்.பௌசி தெரி­வித்­துள்ளாா். 

யாழ்ப்­பா­ணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வில் அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, இந்த நாட்­டில் கூட்­ட­ரசு உரு­வா­கிய பின்­னர் மக்­கள் சமா­தா­னத்­து­ட­னும் பொரு­ளா­த­ரத்­தில் முன்­னேற்­றத்­து­ட­னும் வாழ் ந்து வரு­கின்­ற­னர். 

இந்த அர­சில் ஒரு சில சிறிய குழப்­பங்­கள் காணப்­ப­டு­கின்­றன. எது எவ்­வா­றா­யி­னும் நாட்டு மக்­கள் நலனை கருத்­தில் கொண்டு கூட்டு அர­சைத் தொடர்­வது என்று கடந்த சில தினத்­துக்கு முன்­னர் சந்­தித்த அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­சர் ஆகி­யோர் கூட்­டாக முடிவு எடுத்­துள்­ள­னர். 

அத்­து­டன் அர­சும் பல­மாக இருக்­கின்­றது. நாட்­டில் குழப்­பங்­க­ளுக்கு இட­மில்லை. வடக்கு மக்­க­ளா­கிய நீங்­கள் நாட்­டில் நடந்த 30 ஆண்­டு­கால போர் கார­ண­மாக பின்­னோக்­கிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றீர்­கள். நீங்­கள் முன்­னோக்கி பய­ணிக்­கும் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். 

அதுவே உங்­கள் கடமை. எனவே இங்­குள்ள மாணவ மாண­வி­களே நீங்­கள் அனை­வ­ரும் கல்­வி­யில் சிறப்­பான இடத்­தில் இருக்க வேண்­டும். இங்கு படித்த ஏரா­ள­மா­ன­வர்­கள் தென்­னி­லங்­கை­யில் மருத்­து­வர்­க­ளா­க­வும், உயர் அதி­கா­ரி­க­ளா­க­வும் உள்­ள­னர். நீங்­கள் அனை­வ­ரும் கல்­வி­யில் சிறந்து விளங்க வேண்­டுமெனத் தெரிவித்துள்ளாா்.