தாயகப் பகுதிகளில் இன்னொரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெறக் கூடாது!
தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கு மாகாணங்களில் மற்றுமொரு முள்ளிவாய்க்கால் படுகொலை நடைபெறக் கூடாதென அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்காலில் ஓடிய இரத்த ஆறு எந்தப்பிரதேசத்திலும் ஓடக் கூடாதென அவர்கள் தெரிவித்துள் ளனர். மே மாதம் 18 ஆம் திகதி நினைவு கூரப்படவுள்ள முள்ளிவாய் க்கால் நினைவேந்தல் தினத்திற்கு தமது ஆதரவினை அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வழங்கியுள்ளனர்.
இது தொடர்பான அறிவிப்பினை இன்று (11.05.2016) வெள்ளிக்கிழமை திருக் கோயில் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகாமையில் வைத்து அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனா்.
இதன்போது கருத்து தெரிவித்த அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகளின் சங்க தலைவி செல்வராணி, தற்போதைய சமூகம் அனுபவித்த துயரங்களை எதிர்கால சந்ததியினர் அனுபவிக்க கூடாதென தெரி வித்துள்ளார்.