Breaking News

பாகிஸ்தான் பிரஜைக்கு மரண தண்டனை விதிப்பு.!

இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட பாகிஸ் தான் பிரஜைக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2010 ஆம் ஆண்டு சுமார் 8.3 கிலோகிராம் நிறையுடைய ஹெரோ யின் போதைப்பொருளை இலங்கை க்கு சட்ட விரோதமாக கொண்டுவந்த குற்றச் சாட்டில் குறித்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டார். 

இவ்வாறு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் அவர் மீது நடைபெற்று வந்த நிலையில் இன்றைய தினம் அவர் மீதான வழக்கு விசாரணை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.