இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் - சிறீதரன் - THAMILKINGDOM இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் - சிறீதரன் - THAMILKINGDOM
 • Latest News

  இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் - சிறீதரன்

  கிளிநொச்சி மாவட்டத்தில் இராணுவத்தினரின் வசமுள்ளகாணிகளை மக்க ளிடம் ஒப்படைக்கவேண்டுமென  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரி க்கை முன்வைத்ததாக தெரிவித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பாராளு மன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட கோரி க்கைகளை விரைவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்துள்ளாா். 

  கிளிநொச்சிக்கு விஜயம் மேற் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவிடம் எத்தகைய விடயங்கள் முன் வைக்கப் பட்டுள்ளது எனக்கேட்ட போதே இவ் வாறு தெரிவித் துள்ளாா்.  

  மேலும் தெரிவிக்கையில்...., 

  வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க மாவட்ட செயலகங்களில் நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்வைக்கப் பட்ட செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். 

  குறிப்பாக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கிளி நொச்சி மாவட்டத்தின் நகரத் திட்டமிடலில் 40 வீதமான காணிகள் இராணுவத் தினரின் வசமுள்ளது. இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் தொடர்பாக முழுமையான விபரம் பிரதமரிடம் வழங்கப்பட்டுள்ளது.

  அதேபோல் முழங்காவிலிலுள்ள கஜூத்தோட்டம், பருவகால குடியமர்வு பண் ணைகள், விவசாய கூட்டுறவுச் சங்கங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். இவ்வாறானவற்றை வழங்குவதன்மூலம் தான் அங்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் பண்ணைகளை அபிவிருத்தி செய்ய முடியும். 

  ஆணையிறவு உப்பளம், குறிஞ்சாத்தீவு உப்பளம், பரந்தன் இரசாயனத் தொழிற் சாலை வட்டக்கச்சி அரச விவசாயப் பண்ணை போன்றவை முழுமையாக விடுவிக்கப்பட்டு மாகாண சபையிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

  இது மட்டுமன்றி வனவளத்துறையின் தலையீடானது தற்போது பெரும் பிரச் சினையாக உருவாகியுள்ளது. குறிப்பாக ஜெயபுரம் பகுதியில் விவசாய நிலங் களை குறிப்பாக 1983 ஆம் ஆண்டு வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒன்றரை ஏக்கர் மேட்டுக்காணியும் ஒரு ஏக்கர் வயல் காணியும் சுமார் 400 பேருக்கு வழங்கப்பட்டது. 

  குறித்த காணிகள் பயிற்செய்கை நடவடிக்கை மேற்கொண்டு பின்னர் ஏற்பட்ட யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு இந்தியா சென்ற மக்கள் தற்போது மீளக்குடி யேறியுள்ளனர். 

  2010 ஆம் ஆண்டு குறித்த பகுதி கண்ணிவெடி இருப்பதால் விடுவிக்கப்பட வில்லை பின்னர் கண்ணிவெடி அகற்றப்பட்டு மாவட்ட அரசாங்கத்திடம் ஒப் படைத்த பின்னர் வயல் காணியை திருத்துவதற்கு மக்கள் சென்றால் வன வளப்பகுதியினர் இது தமக்குரிய காணி என மக்களை திருப்பி அனுப்புகின் றனர். 

  வனவளப்பகுதிக்குரிய காணி என்பதற்குரிய அடையாளமே இல்லாத நிலை யில் வனவளப்பிரிவு தர்க்கத்தில் ஈடுபட்டு வருகின்றது. அது மட்டுமன்றி கிளி நொச்சி மாவட்டத்தில் விளையாட்டு மைதானங்களை உருவாக்குவதற்கும் உதவி செய்யவேண்டும் எனவும் மேலும் வடக்கிலுள்ள அரச திணைக் களங் களில் தென்னிலங்கையைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கே வேலை வாய் ப்பு வழங்கப்பட்டு வருகின்றது. 

  குறிப்பாக யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்க ளில் அரச திணைக்களங்களில் வேலை வாய்ப்பிற்கு தகுதியானர்வர்கள் இருக் கின்றபோதும் அவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கு உள்வாங்கப்படாது தென்னி லங்கையைச் சேர்ந்தவர்களே வேலை வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

  இவ்வாறான பல விடயங்களை நாங்கள் சுட்டிக்காட்டியுள்ளோம் இவற்றுக்கு விரைவான நடவடிக்கைகளை பிரதமர் எடுக்கவேண்டும். பிரதமரின் வடக்குக் கான விஜயம் ஒரு பயணமாக மட்டும் இல்லாது தமிழ் மக்களுக்கான தேவை களை குறிப்பாக அடையாளப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களை விரைவில் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்துள்ளாா். 
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இராணுவத்தினரின் வசமுள்ள காணிகளை மக்களிடம் வழங்க வேண்டும் - சிறீதரன் Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top