திருகோணமலை சல்லி பிரதேசத்தில் வாள்வெட்டு : 7 பேர் படுகாயம், 3 பேர் கைது
திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவிலுள்ள சல்லி பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையே நடைபெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 7 பேர் படுகாய மடைந்துள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனா்.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றுள்ளது.
இதே வேளை, சம் பவத்துடன் தொடர்புடைய 3 பேரை சந்தே கத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள் ளனர்.
குறித்த பிரதேசத்தில் ஆலய உற்சவம் இடம்பெற்று வருகின்றது. இந்த நிலை யில் ஆலயத்திற்குச் சென்ற திருகோணமலை நகர் பகுதியைச் சேர்ந்த குழுவின ருக்கும் சல்லி பிரதேசத்திலுள்ள மற்றுமொரு குழுவினருக்கும் இடையே சம் பவதினம் இரவு மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளனர்.
இச் சம்பவத்தில் 3 இளைஞர்களை கைதுசெய்துள்ளதாகவும் இரு குழுக்களுக் கிடையே பழைய விரோதம் காரணமாக மதுபோதையில் இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்பு வெளி பொலிசார் முன்னெடுத்துள்ளனா்.