Breaking News

கோட்டாபயவுக்கும் ஹிட்லருக்குமிடையிலான ஒற்றுமைகள்!

முன்னாள் பாதுகாப்பு செயலாயளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அடொல்ப் ஹிட்லர் இருவருக்குமிடையில் இரு ஒற்றுமைகள் உள்ளன என கல்விய மைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார். 

கோட்டாபய ராஜபக்சவின் 69-ஆவது பிறந்த தினத்தன்று ஆசிர்வாத சமய நிகழ்வொன்று இடம்பெற்றிருந்த போது இராணுவ ஆட்சியையாவது கொண்டு வந்து நாட்டை மீளக் கட்டி யெழுப்புமாறு அஸ்கரி பீட அனுநாயக தேரர் விவரித்துள்ளாா்.

அரசியல் தளத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இந்நிலையில் குறி த்த விடயம் தொடர்பில் இன்று (28.06.2018) ஐக்கிய தேசியக் கட்சியின் தலை மையகத்தில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரி வித்த அமைச்சர் அகிலவிராஜ், ஹிட்லர் ஜேர்மனியை ஆண்டாலும் இன்றும் அவருக்கு ஜேர்மனியினர் எதிர்ப்பினையே தெரிவித்துள்ளாா். 

ஆஸ்திரியாவில் பிறந்த ஹிட்லர் ஜேர்மனியை ஆட்சி செய்தாலும் இரு நாட்ட வரும் அவரை விரும்பவில்லையென்பதே உண்மையாகும். இன்றும் அந்த நாடுகளில் ஹிட்லரை பின்பற்றுவது இல்லை. 

அவ்வாறானதொரு நிலையில் பாரம்பரியமாக ஜனநாயகத்தை பின்பற்றி வரும் எமது நாட்டிற்கு ஹிட்லராட்சி வேண்டும் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாததாகும். 

முன்னாள் பாதுகாப்பு செயலாயளர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அடொல்ப் ஹிட்லர் இருவருக்குமிடையில் இரு ஒற்றுமைகள் உள்ளன. இருவருக்கும் இரு நாட்டில் பிரஜாவுரிமை உள்ளதோடு இருவரும் சைவ உணவு உண்ணு பவர்களாவர். 

இதில் மாத்திரமே இருவருக்குமிடையில் ஒற்றுமைகள் உள்ளன. ஜனநாய கத்தை இல்லாதொழித்து, ஊடக சுதந்திரத்திற்கு தடைவிதித்து மற்றும் மனித உரிமைகளை இரத்து செய்த ஓர் ஆட்சியினை, சுதந்திர நாடாக இருக்கும் எமது நாட்டில் இவ்வாறானதொரு ஆட்சியினை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார் கள். 

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு முன்னாள் பாதுகாப்பு செயலா ளர் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராவாரெனின் இரு மாதங்க ளுக்குள் தனது அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்வதாக கூறியிருந்தார், அவ்வாறு அவர் வேட்பாளராக களமிறங்க மாட்டாரெனின் அந்த குடியுரி மையை இரத்து செய்ய மறுப்பதனையும் அவர் தெரிவித்த விதத்தில் நன்றாக விளங்கிக் கொள்ள முடிகின்றது. 

ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கினாலும் இல்லாவிடினும் அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்ள தயாரா என நான் கோட்டாபயவிற்கு சவால் விடுக்கின்றேன். 

எமது நாட்டின் மீதும் பௌத்த தர்மத்தின் மீது பற்றுள்ள ஒருவரெனின் அமெரிக்க குடியுரிமையையே நீக்க வேண்டும் என நான் கோருகின்றேன்” என மேலும் தெரிவித்துள்ளாா்.