பிள்ளைகளை பாதுகாக்க வருகிறது புதிய நடைமுறை-மாகாண கல்வியமைச்சு - THAMILKINGDOM பிள்ளைகளை பாதுகாக்க வருகிறது புதிய நடைமுறை-மாகாண கல்வியமைச்சு - THAMILKINGDOM

  • Latest News

    பிள்ளைகளை பாதுகாக்க வருகிறது புதிய நடைமுறை-மாகாண கல்வியமைச்சு

    வடக்கு மாகாண பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் அறிவித்துள்ளார்.

    மாணவி சிவனேஸ்வரன் ரெஜினாவின் படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்ட பத்திரிகைச் செய்திக் குறிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

    சுழிபுரம் காட்டுப்புலம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி கற்றுக் கொண்டிருந்த மாணவி சிவனேஸ்வரன் ரெஜினா பாடசாலையில் இருந்து வீட்டுக்கு வந்ததன் பின்னர், ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டு, படுகொலை செய்யப் பட்டார்.

    இத்தகைய துன்பகரமான சம்பவங்கள், எதிர்காலத்தில் நிகழாது இருக்க, சிறுபிள்ளைகள் தொடர்பான பெற்றோர்களின் விழிப்புணர்வு, அவசியமானதாகும். எனினும் எதிர்காலத்தில் சிறுவர்க ளுக்கு இத்தகைய ஆபத்துக்கள் ஏற்படுவதைக் குறைக்கக் கூடிய வகையில் வடமாகாணக் கல்வி அமைச்சு தனது வரையறை களுக்குள், நடவடிக்கைகள் மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளது.

    வடக்கு மாகாணத்தின், பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளில் கல்வி கற்கும் மாணவர்களை, பாடசாலை முடிந்ததும் பெற்றோர்களோ அல்லது பெற்றோர்களால் பெயர் குறிப்பிடப்பட்டு நியமிக்கப்பட்டவர்களோ மட்டுமே வந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நடைமுறையைச் செயற்படுத்தத் தீர்மானித்துள்ளோம்.

    இது எதிர்காலத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஒரு நடைமுறையாகவும் இருக்கும்“ என்றுள்ளது.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: பிள்ளைகளை பாதுகாக்க வருகிறது புதிய நடைமுறை-மாகாண கல்வியமைச்சு Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top