நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதரவை வாபஸ் பெறப்போவதாக கூட்டமைப்பு.!
தமிழர்களின் இனப் பிரச்சினைக்கான தீர்வு எனத் தெரிவிக்கப்பட்ட புதிய அரசியலமைப்புச் செயற்பாடுகள் முடங்கியுள்ள நிலையில் தொடர்ந்தும் அர சாங்கம் ஆதரவு நல்கப் போவதில்லையென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்திற்கான ஆதவினை கூட்டமைப்பு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதையே சர்வதேசமும் விரு ம்புவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரு மான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
மைத்திரி ரணில் தலைமையிலான நல் லாட்சி அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு நிபந்தனையற்ற ஆதரவு வழங்கி அர சாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தது.
எனினும், நல்லாட்சி அரசாங்கம் கூறியவாறு அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்வர்களின் பிரச்சினைக்கான தீர்வு, காணி விடுவிப்பு, புதிய அரசியல் யாப்பு திருத்தம் ஆகிய பணிகள் மந்த கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக பொது மக்கள், பொது அமைப்புக்கள் விமர்சனங்களை முன்வைத்து வந்திருந்த நிலையில் அரசாங் கத்திற்கு வழங்கி வரும் ஆதரவினை வாபஸ் பெறவுள்ளதாக யாழ்ப்பாணத் தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.
அதேவேளை, வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை மீண்டும் முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசுக் கட்சி நிறுத்தாது எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளாா்.