Breaking News

மாகாண சபைத்தேர்தலை நடத்துமாறு பெப்ரல் அமைப்பு ; சபாநாயகருக்கு கடிதம்.!

நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்து மாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதம் ஒன்றை இன்று அனுப்பியுள்ளது.

அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட் டுள்ளதாவது, பதவிக்காலம் முடி வடைந்து 8 மாதம் நிறைவடைந் துள்ள மூன்று மாகாணசபைகள் உட் பட எதிர்வரும் ஒக்டோபர் மாத்துடன் நிறைவடையவுள்ள மாகாண சபை கள் மூன்றுக்குமான தேர்தலை நடத் துவதற்கு நடவடிக்கைகளை விரைவு படுத்துமாறு கோரி பெப்ரல் அமைப்பு சபாநாயகருக்கு அவசர கடிதமொன்றினை இன்று அனுப்பி வைத்துள்ளது.

 மாகாணசபைகளின் கால எல்லை நிறைவடைந்தவுடன் சபைகளுகளுக்குரிய எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபட்டிரக்கவேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தவுடன் அது குறித்த விவாதாங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

வடமத்திய, சப்ரகமவ மற்றும் கிழக்கு மாகாணங்களின் கால எல்லை நிறை வடைந்து 8 மாதங்கள் முடிவடைந்துள்ளதுடன் எதிர்வரும் ஒக்டோபர் மாதத் துடன் மேலும் மூன்று மாவட்டங்களுக்கான கால எல்லை நிறைவடையவு ள்ளது.

8 மாத காலம் முடிவடைந்ததும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப் படாது உள்ளமையானது ஜனாநாயகத்துக்கு முரணானதும் மக்களுரிமைக்கு எதிரானதும் என சுட்டிக்காட்டியே குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.