Breaking News

அமெரிக்காவின் தீர்மானத்தை ‍கோத்தாவால் மீற முடியாது - ராஜித

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ 2020 ஆம் ஆண்டு தேர்­தலில் போட்டியிட முடி­யாதென அமெ­ரிக்கா தீர்­மானம் எடுத்தால் அதனை அவரால் மீற­மு­டி­யாது. 
அமெ­ரிக்க பிரஜை என்ற வகையில் கோத்­த­பாய ராஜபக்ஷ அமெ­ரிக்­கா வின் சட்­டங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­டாக வேண்டும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்துள்ளாா். 

ஒரு நாடு எவ்­வாறு இலங்கை மீதான அழுத்­தங்­களை முன்­வைக்க முடியும் என்று வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை வெளிப்­ப­டுத்தும் செய்­தி­யாளர் சந்­திப்பில் ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பி­ய­போதே அமைச்சர் ராஜித சேனா­ரத்ன இவ்­வாறு தெரிவித்துள்ளாா். 

 மேலும் தெரி­விக்­கையில் 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக்ஷ அமெ­ரிக்க பிரஜை. ஆகவே அவர் அமெ­ரிக்க நாட்டின் தீர்­மா­னங்­க­ளுக்கு கட்­டுப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். அமெ­ரிக்க தூதுவர் அதுல் கேஷாப் இலங்கை அர­சாங்­கத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் நபர் அல்ல. 

அவ­ரது கூற்­றுக்­களை நாம் கேட்கத் தேவை­யில்லை என்ற காரணி சாதா­ர­ண­மா­னது. ஆனால் கோத்­த­பாய ராஜபக்ஷ அமெ­ரிக்க பிரஜை என்ற கார­ணத்­தினால் அமெ­ரிக்க தூது­வரின் கருத்தை அவர் ஏற்க்­கத்தான் வேண்டும். 

அமெ­ரிக்கா ஏதேனும் சட்­டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்­தினால் கோத்­த­பாய ராஜபக்ஷ அதற்கு கட்­டுப்­பட்­ட­வ­ராக இருக்க வேண்டும். அமெ­ரிக்க தூது­வரை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ சந்­தித்தார். 

ஆனால் இந்த கார­ணிகள் குறித்து அவர் ஏன் வாய் திறக்­க­வில்லை.சில பத்­தி­ரி­கை­களில் அவர் அமெ­ரிக்க தூது­வரை சந்­தித்­த­தாக செய்­திகள் வெளி­வந்­துள்ள போதிலும் ஊட­கங்­க­ளுக்கு மஹிந்த ராஜபக்ஷ இந்த கார­ணி­களை கூறா­தது ஏன்? ஆகவே அவ­ரிடம் இது குறித்து வின­வுங்கள் எனத் தெரிவித்துள்ளாா்.